• Sat. Apr 20th, 2024

இந்தியாவிலேயே அதிக கோயில்கள் கொண்ட மாநிலங்களில்..
முதலிடம் பெற்றுத் திகழ்வது தமிழ்நாடுதான்..!

Byவிஷா

Mar 20, 2023

இந்தியாவிலேயே அதிக கோயில்கள் கொண்ட மாநிலங்களில் முதலிடத்தில் இருப்பது தமிழ்நாடுதான் என்பது தமிழர்களுக்கு கிடைத்த பெருமை என்றே சொல்ல வேண்டும்.
கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தின் அடிப்படையில் மிகவும் செழுமையான இந்தியாவின் தென் பகுதியில் உள்ள தமிழ்நாடு திகழ்கிறது. தமிழர்கள் தங்களின் வேரூன்றிய தமிழ் கலாச்சாரத்தில் பெருமிதம் கொள்கிறார்கள்.
சுமார் 2000 ஆண்டுகால வரலாற்று பாரம்பரியம் கொண்ட தமிழகத்தில் பிறந்த மக்கள் உலகம் முழுவதும் எங்கிருந்தாலும், அவர்களின் கலாச்சாரம் அவர்களின் அடையாளம் மற்றும் மரபுகளை வலுவாக பின்பற்றுவது அவர்களின் வரலாற்றை மேலும் வலுப்படுத்துகிறது.


தமிழர்களின் பாரம்பரியத்தில் மிக முக்கிய இடம் வகிப்பது தமிழகத்தில் உள்ள கோவில்கள் சேர சோழ பாண்டிய மன்னர் காலங்களில் ஆயிரக்கணக்கான கோயில்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் கட்டி எழுப்பப்பட்ட வழிபாடு மட்டுமல்லாது வரலாற்றின் பக்கங்களை திரும்பிப் பார்க்கும் ஒரு அற்புத புத்தகமாகவும் கோயில்கள் திகழ்கின்றன. மன்னர்களின் ஆட்சி நிர்வாகம் வரலாறு ஆகியவற்றை தெரிந்து கொள்வதற்கு கோவில்களில் உள்ள கல்வெட்டுகள் மிக முக்கிய சாட்சியமாக விளங்குகின்றன.
அந்த அளவுக்கு தமிழர்களை பாரம்பரியத்தோடு பின்னிப் பிணைந்தவை கோவில்கள். இந்தியாவிலேயே அதிக எண்ணிக்கையில் கோவில்கள் உள்ள மாநிலம் தமிழ்நாடாகும். இங்கு 24,608 சிவன் கோயில்கள் உள்ளன இவற்றில் சமயக் குரவர்களால் பாடல் பெற்ற தலங்கள் 247. திருப்புகழ் பாடல் பெற்ற தலங்கள் 106. பெருமாளுக்கு 10,033 கோவில்கள் உள்ளன. மேலும் 10,346 ஏனைய கோவில்களும் உள்ளது குறிப்பிடத்தக்கது என பழைய தகவல்கள் கூறியுள்ளன. ஆனால் தற்போது வந்துள்ள தகவல்களின் படி சுமார் 79 ஆயிரம் கோவில்கள் இருப்பது தெரிய வந்துள்ளது.
இந்தியாவில் தற்போது உள்ள கோயில்களின் எண்ணிக்கை மற்றும் பாரம்பரியம் ஆகிய தகவல்களை சேகரிப்பதற்காக, கடந்த 2022ஆம் ஆண்டு மும்பை ஐஐடி மாணவர்கள் கள ஆய்வு ஒன்றில் ஈடுபட்டனர்.. அந்த ஆய்வின் படி நாட்டிலேயே அதிகபட்சமாக தமிழகத்தில் தான் கோயில்கள் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. அதாவது தமிழகத்தில் மட்டும் 79,154 கோவில்கள் உள்ளதாகவும், தமிழகத்தில் 1 லட்சம் பேருக்கு 103 கோயில்கள் என்ற எண்ணிக்கை உள்ளதும் தெரியவந்துள்ளது.
ஐந்தாவது இடத்தில் உள்ள மாநிலம் குஜராத். இங்கு 49,995 கோயில்கள் உள்ளன. இதில் சோம்நாத் ஆலயம், சாம்லஜி விஷ்ணு கோயில், நிஷ்கலங்க் மஹாதேவ் கோயில் உள்ளிட்ட பல கோயில்கள் பிரசித்தி பெற்றது. நான்காவது இடத்தில் மேற்குவங்காளம் உள்ளது. இங்கு 53,658 கோயில்கள் உள்ளன. இதில் காலிகாட் ஆலயம், பிர்லா கோயில் உள்ளிட்ட பல ஆலயங்கள் பிரசித்தி பெற்றவையாகத் திகழ்;கின்றன. மூன்றாவது இடத்தில் கர்நாடகா மாநிலம் உள்ளது. இங்கு 62,232 கோயில்கள் உள்ளன. இதில் உடுப்பி ஸ்ரீ கிருஷ்ணா ஆலயம், வித்யசங்கரா கோயில், முர்டேஸ்வரர் சிவன் கோயில் என பல பிரசித்தி பெற்ற கோயில்கள் உள்ளன. இரண்டாவது இடத்தில் மகாராஷ்டிரா மாநிலம் உள்ளது. இங்கு 77,283 கோயில்கள் உள்ளன. இதில் ஸ்ரீசித்தி விநாயகர் கோயில், திரயம்பஹேஸ்வரர் கோயில் என பல பிரசித்தி பெற்ற கோயில்கள் உள்ளன. நம்முடைய தமிழ்நாடுதான் முதலிடத்தில் உள்ளது. இங்கு 79,154 கோயில்கள் உள்ளன. இதில் மீனாட்சியம்மன் கோயில், தஞ்சை பெரிய கோயில், ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயில் என பல கோயில்கள் தமிழ்நாட்டில் இருப்பது நமக்கு கிடைத்திருக்கிற மிகப்பெரும் பேறு அல்லவா!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *