



கரூர் மாவட்ட இளம் தலைமுறை விளையாட்டு வீரர்கள் அணி சார்பில் நடைபெறும் அம்மா பிரிமியர் லீக் TURF கிரிக்கெட் போட்டி கரூர் மாவட்ட அதிமுக சார்பில் நடைபெற்றது. இந்த போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ரொக்க பரிசுகள் வழங்கி பாராட்டினார்.
கரூர் மாவட்ட இளம் தலைமுறை விளையாட்டு வீரர்கள் அணி சார்பில் நடைபெறும் அம்மா பிரிமியர் லீக் TURF கிரிக்கெட் போட்டி கரூர் மாவட்ட அதிமுக சார்பில் நடைபெற்றது. இந்த போட்டியினை முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் துவங்கி வைத்தார்.


இதில் கரூர் மாவட்டத்தில் மொத்தம் 70 மேற்பட்ட அணிகள் பங்கு பெற்றுள்ளனர். இதில் 600 விளையாட்டு வீரர்கள் பங்கு பெற்றுள்ளனர். இப்போட்டியானது நான்கு ஓவர்கள் அடிப்படையில் போட்டிகள் நடைபெற்றது.


இந்த போட்டி முழுவதும் நாக் அவுட் முறையில் நடைபெற்று வருகிறது.
இறுதிப்போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுத்தொகை மற்றும் கோப்பைகள் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் முதல் பரிசு Black SQUAD அணிக்கு 20 ஆயிரம், இரண்டாம் பரிசு TCC அணிக்கு 15,000, மூன்றாம் பரிசு MRV BOYS அணிக்கு 10,000, நான்காம் பரிசு AKCC அணிக்கு 7,000 பதக்கம் வழங்கி வெற்றி பெற்ற வீரர்களை பாராட்டு தெரிவித்தார்.


