


கரூர் அருள்மிகு கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, பள்ளி மாணவ, மாணவிகளின் தமிழிசை விழா நடைபெற்றது.
கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட மாநகரின் மையப் பகுதியில் அருள்மிகு கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. தமிழ் புத்தாண்டான சித்திரைத் திருநாளை முன்னிட்டு தமிழிசை விழா கோவில் வளாகத்தில் நடைபெற்றது. இதில் பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு பக்திப் பாடல்களை வீணை, கீ போர்ட், வாய்ப்பாட்டு மூலமாக வாசித்து காட்டினர். இதனை கோவிலுக்கு வருகை தந்த பக்தர்கள் கண்டு ரசித்துச் சென்றனர்.


