• Sun. Aug 9th, 2026
WhatsAppImage2026-08-06at2018242
previous arrow
next arrow
Read Now

தவெக கட்சியின் சார்பில் காமராஜர் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை..,

ByP.Thangapandi

Jul 15, 2026

தமிழகம் முழுவதும் தவெக கட்சியின் சார்பில் பல்வேறு இடங்களில் கட்சி நிர்வாகிகள் காமராஜர் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்பு மற்றும் அன்னதானம் வழங்கி கொண்டாடி வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தேவர் சிலை முன்பு காமராஜரின் 124-வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது திருவுருவ படத்திற்கு உசிலம்பட்டி தவெக எம்எல்ஏ விஜய் தலைமையில் கட்சி நிர்வாகிகள் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புக்கள் வழங்கி கொண்டாடினர். இதில் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு காமராஜர் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.