

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் குடிகொண்டு அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ வேம்பு மாரியம்மன் ஆலயத்தில் பங்குனி சித்திரை 25 ஆம் ஆண்டு திருவிழாவை முன்னிட்டு இன்று அமராவதி ஆற்றில் இருந்து நூற்றுக்கு மேற்பட்ட பக்தர்கள் பால்குடம், தீர்த்த குடம், கரும்புத் தொட்டில் உள்ளிட்ட நேர்த்திக்கடனை செய்தனர்.

கரூர் உழவர் சந்தை அருகே உள்ள வஞ்சளீஸ்வரர் ஆலயம் அருகில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் மேள தாலங்கள் முழங்க புறப்பட்ட பக்தர்கள் கரூர் நகர முக்கிய பகுதியில் வழியாக வளம் வந்த பிறகு ஆலயம் வந்தடைந்தனர்.

பக்தர்கள் கொண்டு வந்த பால்குடம் மற்றும் தீர்த்தக்தால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஏற்பாட்டை ஆலய நிர்வாகிகள் சார்பாக சிறப்பாக செய்தனர்.

