• Wed. Sep 30th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

கோவை ஆர் எஸ் புரம் பகுதியில், மாவட்ட அளவிலான ஹாக்கி போட்டி..,

BySeenu

Jul 1, 2026

கோவை மாவட்ட ஹாக்கி சங்கம் சார்பாக, கோவை ஆர் எஸ் புரம் பகுதியில் 14வயது, 16வயது மற்றும் 19வயதுக்கு உட்பட்ட பள்ளி மாணவ மாணவிகளுக்கான மாவட்ட அளவிலான ஹாக்கி போட்டிகள் இன்று துவங்கியது. 30 ம் தேதி முதல் ஜூலை 5ம் தேதி வரை ஆர் எஸ் புரம் பகுதியில் உள்ள சர்வதேச ஹாக்கி மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டிகளில் கலந்து கொள்ள கோவை மாவட்டத்தில் உள்ள தனியார், மற்றும் அரசு பள்ளிகளான 16 பள்ளிகளில் இருந்து சுமார், 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த போட்டிகளானது இந்துஸ்தான் கல்வி குழுமம் ட்ராபி எனும் பெயரில் இரண்டாவது ஆண்டாக நடைபெற்று வருகின்றது. இதில் வெற்றி பெறும் மாணவ மாணவியர்களுக்கு வரும் 5ம் தேதி பரிசுகள் வழங்கப்பட உள்ளது. இந்த நிகழ்ச்சியில் ஹாக்கி யூனிட் ஆப் தமிழ்நாடு மற்றும் கோவை மாவட்ட ஹாக்கி சங்க செயலாளருமான முனைவர்
செந்தில் ராஜ் குமார்,தலைமை தாங்கினார்.

மேலும் இந்த நிகழ்ச்சியில் போட்டிகுழு தலைவர் சோமசுந்தர மூர்த்தி, திருநாவுக்கரசு, மற்றும் கோவை மாவட்ட ஹாக்கி சங்க தலைவர் லக்ஷ்மி நாராயணசாமி ஆகியோர் மேற்பார்வையில் இந்த போட்டிகள் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.