• Wed. Jul 15th, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கடும் குற்றச்சாட்டு..,

ByKalamegam Viswanathan

Jul 15, 2026

ஒரு கட்சி சின்னத்தில் நின்று மக்களின் நம்பிக்கை பெற்று வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர்களின் விரல் மையின் ஈரம் காயும் முன்பே விலை பேசும் விபரீதத்தை த.வெ.க. கட்சி அரங்கேற்று வருவது இதுவரை தமிழக மக்கள் கண்டதில்லை.

நீதிக்கும், தர்மத்திற்கும், நியாயத்திற்கும், சட்டத்திற்கும் ஏன் மக்களுக்கும் சிறிது கூட அஞ்சாமல் அடுத்த கட்சி சட்டமன்ற உறுப்பினருக்கு ஆஃபர் கொடுத்து ஆள் பிடிக்கு வேலை மட்டுமே செய்து அதில் குறிப்பாக அதிமுகவை குறிவைத்து ஆள் பிடித்து த.வெ.க கட்சியின் ஆயுளை நீடித்துக் கொள்ள பட்ட பகலில், வெட்ட வெளிச்சத்தில் அதிகார ஆஃபர் கொடுத்து, குதிரை பேரத்தை நடத்துவதை ஜனநாயக மீது நம்பிக்கையுள்ள கட்சிகள் மௌனமாக கடந்து போவதின் என்ன மர்மம் என்னவென்று புரியவில்லை, கேட்பதற்கு நாதி இல்லையா ,.இந்த குதிரை பேரத்திற்கு எப்போது முற்றுப்புள்ளி வரும் மக்களே நீங்கள்தான் தீர்ப்பளிக்க வேண்டும்.

முன்னாள் அமைச்சர் கரூர் விஜயபாஸ்கர் கொடுத்த வாக்குமூலம், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கொடுத்த வாக்குமூலம் ஊடகங்களில் வெளிவந்த பிறகு, விஜயபாஸ்கர் என்னை அப்ரோச் செய்திருந்தார்கள் பிடித்திருந்தது சேர்ந்திருக்கிறேன் என்று கூறினார். ராஜினாமா செய்யுங்கள் வெற்றி பெற வைக்கிறேன் என்று முதலில் வைகோ ஒப்புதல் வாக்கு மூலம் கொடுத்தார் பிறகு பிழல் சாட்சியான மர்மம்தான் புரியவில்லை .யார் கொடுத்த அழுத்தமோ ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தவர்கள் பிழல் சாட்சியாக மாறிய மர்மம் அரங்கேறி உள்ளது .

இதுகுறித்து ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்ட அரசியல் கட்சிகள் கேள்வி எழுப்ப மனம் வரவில்லை. இது எல்லாம் எதற்காக நடக்கிறது கட்டமைப்பு இல்லாத த.வெ.க கட்சியை காப்பாற்ற அதிகாரத்தை மட்டும் வைத்துள்ள முதலமைச்சர் விஜய் ஆஃபர் வழங்குவதால் த.வெ.ககட்சி வளர்க்க முடியும் என்று நம்புகிறாரோ என்ன தெரியவில்லை .

சில வரலாற்று முதலமைச்சர் தெரியும் மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனா கட்சி ஆளுமை எப்படி என்பது நாட்டுக்கே தெரியும் தற்போது ஆளுமை அடையாளம் எங்கே போனது. அதேபோல மேற்கு வங்காளத்தில் மம்தா பானர்ஜி ஆளுமை எப்படி இருந்தது தற்போது அடையாளம் தெரியாமல் போய் போய்விட்டது. அதேபோல ஆம் ஆத்மி கெஜ்ரிவாலின் டெல்லி, பஞ்சாப்பை ஆளுமை எப்படி பேசப்பட்டது தற்போது ஆளுமை எங்கே போனது இதற்கு விடை தெரிந்தால் விஜய் இந்த விசுவாசத்தை விலை பேசும் ஆடுபுலி ஆட்டத்தை ஆட மட்டார்.

விசுவாசத்தால் கட்சியை வளர்க்க வேண்டுமே தவிர விலை போனவர்களை அழைத்துக் கொண்டு விலாசத்தை கொடுத்து பக்கத்தில் வைத்துக் கொள்வது விளம்பரத்திற்கு சரியாக இருக்கும் ஆனால் விசுவாசத்திற்கு அடித்தளமாக அமையாது.

ஒன்றை மட்டும் முதலமைச்சர் தெரிந்து கொள்ள வேண்டும் அதிமுக புரட்சித்தலைவர் எம்ஜிஆர் உருவாக்கப்பட்டு ,அம்மாவால் வளர்க்கப்பட்டு எடப்பாடியார் தற்போது கட்டி காப்பாற்றப்பட்டு வருகிறது.

அதிமுக என்பது political party leaders manufacturing ஆகும் இன்றைக்கு அதிமுகவில் சென்ற முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரன் பாஜக தலைவராக உள்ளார். அதேபோல திருநாவுக்கரசு காங்கிரசில் தலைவராக இருந்தார். அதிமுகவில் இருந்து சென்றவர்கள் திமுகவில் 12 அமைச்சர்களாக இருந்தார்கள். இவர்களெல்லாம் விருப்பம் பெற்று சென்றவர்கள் தான் விலை பேசி சென்றவர்கள் அல்ல .

இவர்கள் உங்களிடம் விசுவாசத்தால் வரவில்லை விலை பேசி வந்தவர்கள் தான் என்பதை விஜய் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் .

விஜய் நடத்தும் குதிரை பேரம் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை உள்ள கட்சிகளான உங்களுக்கும் நாளைக்கு வரலாம் பக்கத்தில் வீட்டில்தான் தீ பற்றி எரிகிறது என்று நினைக்க கூடாது தண்ணீர் ஊற்றி அணைக்க வேண்டும் அணைக்க தவறாவிட்டால் உங்கள் வீடு பற்றி எரியும் அந்த நாள் வெகு தொலைவில் இல்லை இதையெல்லாம் ஜனநாயகத்தின் நம்பிக்கை உள்ள கட்சிகள் முதலமைச்சருக்கு நீங்கள் எடுத்துச் சொல்ல வேண்டும்.

ஜனநாயகத்திற்கு விரோதமாக ஆண்டவனே சென்றாலும் தமிழகத்தில் ஜனநாயத்தின் மீது நம்பிக்கையுள்ள கட்சிகள் இன்னமும் உயிருடன் இருக்கிறது என்பதை நீங்கள் நிரூபித்து காட்ட வேண்டும்

தூய ஆட்சி ,வெளிப்படையான ஆட்சி என்று கூறினீர்கள் ஆனால் நடவடிக்கை வேறு மாறியாக உள்ளது சட்டசபையில் செய்கை காட்டி எங்கே அப்பாவை காணோம் என்று கூறுகிறார்

அதிமுகவை ஆக்கிரமிப்பு செய்து அழிக்க நினைக்க வேண்டும் சொந்த கொண்டாட வேண்டும் என்ற நினைக்கிறார் விஜய் .ஒரு விவசாயி சாமானியர் எடப்பாடியார் என்பதால் கைப்பற்றி விடலாம் என்று நினைப்பது நியாயமல்ல, தர்மம் அல்ல. அதிமுகவை சொந்தம் கொண்டாட வேண்டும் என்றால் அதிமுக தொண்டர்களாக இருக்க வேண்டும் அல்லது தொண்டர்கள் பிள்ளையாக இருக்க வேண்டும் நீங்கள் யார் பெற்ற பிள்ளையோ எங்களுக்கு தெரியாது.

நீங்கள் சட்டசபையில் எங்கே அப்பாவை காணோம் என்று தேடினீர்கள். பெற்ற அப்பாவையா வளர்தத அப்பாவையா இன்னும் கேள்விக்கு விடை தெரியாமல் உள்ளது.

நீங்கள் பெற்ற அப்பாவின் பெயரையும், வளர்த்த அப்பாவின் பேரையும் நீங்கள் சொன்னால் நாங்கள் தேடி கண்டுபிடித்து உங்களுக்கு தருகிறோம். எங்கள் கட்சியை நாசப்படுத்தும் நினைக்கும் உங்களுக்கு பெற்ற அப்பா புத்திமதி சொன்னால் கேட்பீர்களா என்பது எங்களுக்கு தெரியாது நாங்கள் பொறுத்து இருப்போம் காலம் பதில் சொல்லும் எனக் கூறினார்.