நெல்லையில் மாணவி ஒருவர் இருகைகளாலும் திருக்குறளை எழுதி சாதனை படைத்திருப்பது அனைவரையும் வியக்க வைத்திருக்கிறது.
திருநெல்வேலி மாவட்டம் சுத்தமல்லி பாரதி நகர் பகுதியில் எண்ணெய் ஆலையை நடத்தி வரும் சீனிவாசன் என்பவரின் மகள் சாந்த சர்மிளா. இவர் தனியார் கல்லூரியில் எம்.எஸ்.சி. இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவர், தனக்கு 2 கைகளால் எழுதும் திறமையை கண்டறிந்தார். அதனைத் தொடர்ந்து, ஒரே நேரத்தில் இரண்டு கைகளை பயன்படுத்தி 12 திருக்குறளை ஐந்து நிமிடத்தில் எழுதி சாதனை படைத்து பதக்கங்களையும் உலக அளவில் சாதனைகளையும் படைத்துள்ளார்.
இதன் அடுத்த கட்டமாக கின்னஸ் ரெக்கார்டில் இடம்பெற வேண்டும் என்பதை இலக்காக கொண்டு தீவிரமாக இரண்டு கைகளால் எழுதி பயிற்சி எடுத்து வருகிறார். தனக்கு இருக்கும் இந்த திறமையை மற்ற மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்க தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். இவரை 9443284469 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என மாணவியின் தந்தை தெரிவித்துள்ளார். மேலும் 2 கைகளால் திருக்குறள் எழுதும் தனது மகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைத்து பாராட்டி வாழ்த்த வேண்டும் என அவரது தந்தை கோரிக்கை விடுத்துள்ளார்.