• Mon. May 11th, 2026
WhatsAppImage2026-05-08at053925
previous arrow
next arrow
Read Now

தேனியில் தமிழ்நாடு அனைத்து மருந்தாளுனர் நல கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்

“பட்டைய மருந்தாளுனர்களின் (Diploma pharmacist) வேலை வாய்ப்பு உரிமையினை பறிப்பதை கைவிடக்கோரி” தேனியில் தமிழ்நாடு அனைத்து மருந்தாளுனர் நல கூட்டமைப்பினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


மாநில தலைவர் நாகராஜ் தலைமை வகித்தார். தேனி மாவட்ட தலைவர் P. சுரேஷ், செயலாளர் தர்மா முன்னிலை வகித்தனர். மாநில செயலாளர் நாகேந்திர மணி மற்றும் நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். பட்டைய மருந்தாளுனர்களின் வேலை வாய்ப்பு உரிமையினை பறிப்பதை கைவிடக் கோரி கண்டன கோஷம் எழுப்பினர்.


மேலும் ஜன., 27ல் சென்னை டி.எம்.எஸ்., வளாகத்தில் பட்டைய மருந்தாளுனர்களின் தொடர் உண்ணாவிரத்தில் பங்கேற்பது என தீர்மானிக்கப்பட்டது. இது தொடர்பாக பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்களை வழங்கினர்.