• Sun. Apr 12th, 2026
WhatsAppImage2026-04-10at0716401
previous arrow
next arrow
Read Now

நத்தத்தில் தவெக-யில் இணைந்த மாற்று கட்சியினர்..,

ByVasanth Siddharthan

Mar 15, 2026

நத்தம் அருகேயுள்ள இடையபட்டியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் த.வெ.க-யில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்டோர் இணைந்தனர்.

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகேயுள்ள இடையபட்டியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் த.வெ.க-யில் அதிமுக, திமுக, தேமுதிக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள் தங்கள் கட்சிகளிலிருந்து விலகி, தமிழக வெற்றிக் கழகத்தில் 500-க்கும் மேற்பட்டோர் இணைந்தனர். நத்தம் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் இதில் பெருமளவு கலந்துகொண்டனர்.

திண்டுக்கல் தெற்கு மாவட்ட செயலர் எஸ்.எம்.நிர்மல்குமார் தலைமையில் நடைபெற்றது. ந்த இணைப்பு நிகழ்வில் மாவட்ட இணைச் செயலர் சந்தோஷ்குமார், நத்தம் தெற்கு ஒன்றிய செயலர் ஜே.பி.ஜோதிராம் ,ஒன்றிய இணைச் செயலாளர் தங்கச்சாமி, பொருளாளர் சி.பி.குட்டீஸ், துணைச் செயலர்கள் ராஜேஷ், நல்லதம்பி, செயற்குழு உறுப்பினர் ரஞ்சித் உள்ளிட்ட மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.