• Mon. Sep 21st, 2026
WhatsAppImage2026-09-17at2324521
previous arrow
next arrow
Read Now

திண்டுக்கல் அருகே தொடர்ந்து மணல் கொள்ளை..,

ByS.Ariyanayagam

Mar 16, 2026

திண்டுக்கல் அருகே தொடர்ந்து மணல் கொள்ளை நடந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே உள்ள கொசவபட்டி பகுதியில் அரசு அனுமதி இல்லாமல் தொடர்ந்தும் மண் கொள்ளையில் ஈடுபட்டவர்களை இன்று திண்டுக்கல் மாவட்ட கனிமவள அதிகாரி கிருஷ்ணமோகன் தலைமையிலான அதிகாரிகள் சுற்றி வளைத்து இரண்டு லாரிகளை மண்ணுடன் பிடித்துள்ளனர்.

மேலும் தொடர்ந்து மண் கொள்ளையில் ஈடுபடும் நபர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது இரண்டு லாரிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மாவட்டக் கனிமவள அதிகாரி மாவட்டம் முழுவதும் தொடர்ந்து ஆய்வு செய்தால் மேலும் பல்வேறு மண்கொள்ளையர்கள் சிக்குவார்கள் என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.