• Thu. Aug 6th, 2026
WhatsAppImage2026-08-06at2018242
previous arrow
next arrow
Read Now

திமுக கூட்டணி கட்சியின் சார்பாக ஆர்ப்பாட்டம்..,

ByPuthar Pandian P

Mar 15, 2026

மத்திய அரசை கண்டித்து நிலக்கோட்டையில் திமுக கூட்டணி கட்சியின் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் இ.பெ. செந்தில்குமார் எம்.எல்.ஏ சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

அப்போது அவர் பேசுகையில் .
மத்திய அரசு மோடி அரசு வந்து மாநில அரசை வஞ்சிக்கிறது இந்தியாவைப் பற்றி கவலைப்படவில்லை ஈரான் ஒருநாள் பாதிப்பு ஏற்படும் இந்தியாவிற்கு என்பதை பற்றி கவலையும் இல்லை இதனால் தற்போது எரிபொருள் சிலிண்டர்கள் தட்டுப்பாடு ஏற்பட்டு தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் நடுத்தர மக்கள் ஹோட்டல்கள் நடத்துபவர்கள் டீக்கடை நடத்துபவர்கள் பாதிப்பு ஆளாகி வருகின்றனர்.
எரிபொருள் , சிலிண்டர் தட்டுப்பாடு போக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பேசினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் நிலக்கோட்டை தெற்கு தி.மு.க.ஒன்றிய செயலாளர் மணிகண்டன், நிலக்கோட்டை வடக்கு ஒன்றிய செயலாளர் சவுந்தர பாண்டியன்,
நிலக்கோட்டை மேற்கு திமுக ஒன்றிய செயலாளர் கரிகால பாண்டியன்
காங்கிரஸ் வட்டாரத் தலைவர் கோகுல்நாத் மற்றும் கூட்டணிக் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். முன்னதாக ஆர்ப்பாட்டக் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது 40க்கும் மேற்பட்டோர் மட்டுமே கலந்து கொண்டனர்.

அதனைத் தொடர்ந்து திண்டுக்கல் கிழக்கு மாவட்டச் செயலாளர் இ.பெ.செந்தில்குமார் எம்.எல் ஏ.வருகை தந்தார். அப்போது தி.மு.க மேற்கு ஒன்றிய செயலாளர் கரிகால பாண்டியன் தலைமையில் சுமார் 2 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் திரண்டு வந்து கலந்து கொண்டனர். இதனால் நிலக்கோட்டை ஆர்ப்பாட்டத்தின் போது பரபரப்பு ஏற்பட்டது. மதுரை – வத்தலக்குண்டு செல்லும் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது