• Wed. Sep 9th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

சியானுக்காக காத்திருக்கும் 3 இயக்குனர்கள்?

நடிகர் விக்ரம் தற்போது இயக்குனர் மணிரத்தினம் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்திலும், அஜய் ஞானமுத்து இயக்கத்தில் கோப்ரா திரைப்படத்திலும் நடித்து முடித்துள்ளார். பொன்னியின் செல்வன் திரைப்படம் செப்டம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. கோப்ரா திரைப்படம் ஜூன் மாதம் வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது.

முன்னதாக பா.ரஞ்சித் இயக்கத்தில், விக்ரம் நடிக்க இருப்பதாக கூறப்பட்ட நிலையில், ரஞ்சித் தற்போது வேறொரு படத்தில் பிசியாக இருப்பதால் அந்த படத்தை முடித்து விட்டு விக்ரம் படத்தை இயக்குவார் என்றும் கூறப்படுகிறது. இதற்கிடையில் நடிகர் விக்ரம் ஒரு புதிய திரைப்படத்தில் நடிக்க திட்டமிட்டுள்ளதாகவும், அதனை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பதாகவும், படத்தை இயக்க மாரி செல்வராஜ், பி.எஸ்.மித்ரன், பாண்டிராஜ் இவர்கள் மூவரில் யாரேனும் ஒருவருக்கு வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.