• Wed. Sep 23rd, 2026
WhatsAppImage2026-09-17at2324521
previous arrow
next arrow
Read Now

முதல் 10 ரீல்களில் மாஸ் காட்டணும்! – சத்யராஜ்

சூர்யாவின் ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தில் முக்கியமான வேடத்தில் நடித்துள்ளார் சத்யராஜ்.

நடிகர் சத்யராஜ் தமிழ் சினிமாவில் வில்லனாக 100 படங்களுக்கும் மேல் நடித்துள்ளார். அதன் பின்னர் பாரதிராஜாவால் கதாநாயகனாக்கப்பட்டு கதாநாயகனாகவும் 100 படங்களுக்கும் மேல் நடித்துள்ளார். பின்னர், குணச்சித்திர வேடங்களில் நடிக்க ஆரம்பித்தார். இப்போது தமிழை விட தெலுங்கு படங்களில் அதிகமான வாய்ப்புகளை பெற்று கலக்கி வருகிறார்.

இந்நிலையில் சூர்யா நடித்துள்ள எதற்கும் துணிந்தவன் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு பேசுகையில், ‘இன்றைய தலைமுறைக்கு நான் வில்லனாக நடித்ததே தெரியாமல் இருக்கும். அதனால் நான் மறுபடியும் வில்லனாக நடிக்க தயாராக இருக்கிறேன். ஆனால் வில்லனாக நடிக்க வேண்டும் என்றால் படத்தின் முதல் 10 ரீல்களில் நான் ஹீரோவின் கண்களில் விரலை விட்டு ஆட்டும் கதாபாத்திரம் வலுவாக இருக்கவேண்டும்’ என நிபந்தனைகள் விதித்துள்ளார்.