• Fri. Apr 19th, 2024

தமிழக முதல்வருக்கு ஏ ஐ டி யு சி கட்டிட தொழிலாளர் நல சங்கம் கோரிக்கை மனு

நீலகிரி மாவட்டம் மஞ்சூர் குந்தா வட்டாட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு ஏஐடியுசி கட்டிட தொழிலாளர் சங்கத்தின் நீலகிரி மாவட்ட மஞ்சூர் குந்தா தாலுகா சார்பில் தமிழ்நாடு முதலமைச்சருக்கு கிராம நிர்வாக அலுவலர்கள் மூலம் கோரிக்கை மனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டது.

தமிழ்நாட்டில் 60 லட்சம் கட்டிட தொழிலாளர்கள் கட்டிடத் தொழிலை நம்பி வாழ்ந்து வருகிறார்கள்.இவர்களின் பணி பாதுகாப்புக்காகவும் சமூக பாதுகாப்புக்காகவும் தனி சட்டம் இயற்றப்பட்டுள்ளதோடு தனி நல வாரியமும் தனி நலநிதியும் உத்தரவாதப்படுத்தப்பட்டுள்ளது.விபத்து மரணம், இயற்கை மரணம், குடும்ப நிதி, குழந்தைகள் கல்வி, திருமணம் உள்ளிட்டவைகளுக்கு தமிழ்நாட்டில் உதவி நிதி வழங்கப்பட்டு வருகிறது.இது போதுமானதாக இல்லைஎனவே விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கவும் இஎஸ்ஐ, பிராவிடண்ட் பண்ட் திட்டங்கள் அமல்படுத்தப்பட வேண்டும். விபத்து சிகிச்சை, சிகிச்சைக்கான நிவாரணம் உள்ளிட்ட பலன்களை வாரியமூலம் வழங்க வழி செய்யப்பட வேண்டும்.60 வயது நிறைவடைந்த தொழிலாளிக்கு மாதம் ரூபாய் 1000/- ஓய்வு ஊதியம் என்பதை உயர்த்தி வழங்கப்பட வேண்டும். ஈம சடங்கு உதவி, இயற்கை மரண உதவி தொகையும் உயர்த்தி வழங்கப்பட வேண்டும். அனைத்து வேலைகளிலும் 90% பணிகளில் உள்ளூர் தொழிலாளர்களுக்கு வேலை உத்தரவாதம் செய்யப்பட வேண்டும்.பெண் கட்டுமான தொழிலாளர்களுக்கு 50 வயதில் ஓய்வூதியம் வழங்கப்பட வேண்டும்.
கட்டுமான பெண் தொழிலாளர்களுக்கு பேருக்கால பலன் ஆறு மாத கால சம்பளமாக ரூபாய் 90,000/- வழங்கப்பட வேண்டும். குழந்தைகளின் கல்வி செலவை வாரியமே ஏற்க வேண்டும்.வீடு இல்லாத கட்டிட தொழிலாளிக்கு 4 லட்சம் ரூபாய் பணம் வழங்கும் திட்டத்தில் நிதி உதவி கிடைக்க ஆவன செய்யப்பட வேண்டும். ஆண்டுக்கு ரூபாய் 720/- கோடி நலநிதி வசூலிக்கப்படும் நிலையில் தொழிலாளியின் நலனுக்கு நல உதவியை உயர்த்தி வழங்க வேண்டும்.மேற்காணும்பிரச்சனைகளுக்கு தாங்கள் தலையிட்டு தீர்வு காண உதவிடுமாறு பணிவோடு கேட்டுக் கொள்கிறோம். பிக்கட்டி கட்டட சங்க கிளை நிர்வாகிகள் தோழர்கள் ரவிந்திரநாத், S.ரவி ,K.மணி, பரந்தாமன் உள்ளிட்ட கட்டட சங்க தொழிலாளர்கள் பிக்கட்டி VAO யிடம் மனு அளித்தனர். கட்டிட சங்க மாவட்ட செயலாளர் K.M.ஆரி, மாவட்ட கட்டிட சங்க தலைவர் L. சிவகுமார், கிளை சங்க நிர்வாகிகள் ரமணி, ஜோதி, ஜெயலட்சுமி உள்ளிட்ட பல பெண் தொழிலாளர்களும்,ஊராட்சி சங்க செயலாளர் R. ரகுநாதன் அவர்களும் கீழ்குந்தா – 1, கீழ்குந்தா – 2 கிராம நிர்வாக அலுவலர்களிடம் கோரிக்கை மனு அளித்தனர்.இத்துடன் கட்டிட சங்க மேல்குந்தா கிளையின் நிர்வாகிகள் லட்சுமி,பாஞ்சாலி, யசோதா, எலிசபெத் மேரி, பரமேஸ்வரி, நந்தகுமார் உள்ளிட்ட நிர்வாகிகள் மேல்குந்தா VAO அவர்களிடம் மனு அளித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *