• Sat. Apr 26th, 2025

அதிமுக முன்னாள் மாவட்ட செயலாளர் சுந்தரபாண்டியன் நினைவு தின நிகழ்ச்சி

ByK Kaliraj

Feb 21, 2025

சிவகாசி அருகே உள்ள மேட்டுப்பட்டியில் அதிமுக முன்னாள் மாவட்ட செயலாளர் சுந்தரபாண்டியன் நினைவு தின நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக அமைச்சர்கள் ஆர் .பி. உதயகுமார் ,கடம்பூர் ராஜு, பாஸ்கரன் , ராஜலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

நிருபர்களுக்கு கடம்பூர் ராஜுஅளித்த பேட்டியில் கூறியது.

அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா, வழியில் ஆட்சி நடத்தி வந்த எடப்பாடி பழனிச்சாமி வரை அதிமுகவின் கொள்கை இரண்டு மொழி கொள்கை மட்டுமே. இந்தி மொழிக்கு இடம் கிடையாது என்பது உறுதி. அரசியலுக்காக திமுகவினர் மும்மொழியை கொண்டு வர நாடகம் நடத்துகின்றனர். திமுக எதிர்க்கட்சியாக இருந்த போது பிரதமர் ஆக இருந்த மோடியை கோ பேக் மோடி என திமுகவினர் கோசம் எழுப்பினார். அதே வழியில் பாஜக தலைவர் அண்ணாமலை கோ பேக் ஸ்டாலின் என்ற வார்த்தையை பயன்படுத்தி பதிலடி கொடுத்து வருகின்றனர். இது மோசமான அரசியல் திமுக தலைவராக கருணாநிதி இருந்த போது காங்கிரஸ் தலைவராக இருந்த இந்திரா காந்திக்கு கருப்பு கொடி காட்டி அரசியல் கட்சி தலைவர்கள் இழிவு படுத்தும் வேலையை தொடர்ந்து செய்து வந்தவர் என்பது தமிழ் மக்கள் அனைவருக்கும் தெரியும். ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதி சிலவற்றை மற்றும் நிறைவேற்றி விட்டு 90% வாக்குறுதி நிறைவேற்றப்பட்டதாக பொய் சொல்லி வருகிறார். அதனை மக்கள் ஏற்க தயாராக இல்லை .கடந்த தேர்தலில் ஜெயலலிதா எந்த கட்சியிடமும் கூட்டணி வைக்காமல் மக்களிடம் மட்டும் தான் கூட்டணி என தனித்து போட்டிட்டு வெற்றி பெற்று முதலமைச்சராக பதவி வகித்துள்ளார். .அது போன்று வரும் 2026ல் ஸ்டாலின் 234 தொகுதியும் தனித்துப் போட்டியிட தைரியம் இருக்கா? புதிய கல்விக் கொள்கையை திமுக பெயரளவில் மட்டுமே எதிர்ப்பு தெரிவித்து கொள்கிறது. 39 எம்பிக்கள் கொண்ட திமுக பாராளுமன்றத்தில் குரல் எழுப்புவது இல்லை மும்மொழி கல்விக் கொள்கையை புறக்கணிக்கிறோம் என்று கூறி 39 எம்பிக்களும் பதவியை ராஜினாமா செய்வார்களா ? திமுக பாஜக கள்ளத்தொடர்பு தொடர்ந்து வருகிறது உதாரணமாக கலைஞர் நாணயம் வெளியிட்டது. பாஜக அரசுதான் ஒருபுறம் வெள்ளை கொடியும் ஒரு பெரும் கருப்பூ கொடியும் காட்டி தமிழக மக்களை ஸ்டாலின் ஏமாற்ற முயற்சி செய்கிறார். அது வரும் தேர்தலில் மக்கள் சரியான பதிலடி தருவார்கள். அதிமுக இணைப்பு குறித்து பன்னீர்செல்வம் கருத்து தெரிவித்து வருகிறார். அதிமுக கட்சியை விட்டு விலகப்பட்டு தனியாக பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு தோற்றவர். அதிமுக ஒன்று சேர வேண்டும் என கூற பன்னீர்செல்வத்துக்கு தகுதி கிடையாது என கூறினார். மேலும் அதிமுக ஒன்றாக இணையுமா என கேள்வி கேட்டதற்கு தனது பேட்டியை உடனடியாக முடிந்து கொண்டு திரும்பினார்கள்.