இன்றையதினம் விருதுநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க.வில், சிவகாசி மாநகர பகுதி செயலாளர்கள், பகுதி கழக நிர்வாகிகள் பதவிக்கான கழக அமைப்பு தேர்தல் சிவகாசி பார்க்ல்ன் அரங்கில் சிறப்புடன் நடைபெற்றது…
சிவகாசி மாநகர பகுதி கழக அமைப்பு தேர்தலுக்கான பூர்த்தி செய்யப்பட்ட விருப்ப மனு விண்ணப்ப படிவங்கள் பெறப்பட்டது. விருதுநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளர், முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி, விருதுநகர் மேற்கு மாவட்ட கழக அமைப்பு தேர்தல் பொறுப்பாளர்களான, கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன், கழக மருத்துவரணி துணைச்செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஆ.மணிகண்டன், ஈரோடு மாநகர மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.வி.ராமலிங்கம் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.
மேலும் இந்நிகழ்வின்போது விருதுநகர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ராதாகிருஷ்ணன், கழக இளைஞரணி துணைச்செயலாளரும் சாத்தூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான எம்.எஸ்.ஆர்.ராஜவர்மன் மற்றும் விருதுநகர் மேற்கு மாவட்ட, சிவகாசி மாநகர பகுதி கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.