விருதுநகரில் கடந்த 3 தினங்களுக்கு முன்பாக இடி மின்னல் தாக்கி உயிரிழந்த 4 பேரின் குடும்பத்தினருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து இரண்டு லட்ச ரூபாய்க்கான காசோலையை தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு வழங்கினார்.
விருதுநகர் கருப்பசாமி நகர் இப்பகுதியில் கடந்த (13.4.22) அன்று புதிய கட்டிடம் வேலை பார்க்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது இடி மின்னல் தாக்கி ரோசல்பட்டி சேர்ந்த ஜெயசூர்யா ஜக்கம்மாள் முருகன் மற்றும் கார்த்திக் ராஜா உள்ளிட்ட 4 பேரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். அவர்களுக்கு தமிழக முதல்வர் முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து இரண்டு லட்ச ரூபாய் வழங்கப்படும் என தெரிவித்ததையடுத்து விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு உயிரிழந்த குடும்பத்தின் உறவினர்களுக்கு 2 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார். நிகழ்ச்சியின்போது மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் சீனிவாசன் மற்றும் அரசு ஊழியர்கள் என பலர் உடனிருந்தனர்.