• Thu. Dec 12th, 2024

அதிமுக ஒருங்கிணைப்பளார் ஓபிஎஸ் நலம்பெற… முதல்வர் ஸ்டாலினின் ட்விஸ்டான ட்வீட்…

கடந்த ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற அதிமுக செயற்குழு பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அ.தி.மு.க. பொதுக்குழுவுக்கு எதிராக ஓ.பன்னீர் செல்வம் தாக்கல் செய்த மனுவை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்த நிலையில், திட்டமிட்டபடி அ.தி.மு.க. செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அ.தி.மு.க. இரட்டை தலைமை பதவியை ரத்து செய்தும், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தலை நடத்தவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்வு செய்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இது ஒருபுறம் இருக்க உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் நேற்று ஓ. பன்னீர்செல்வம் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் அவர் நலம்பெற்று வருமாறு ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். தற்போது இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. முதல்வர் ஸ்டாலின் ட்விட்டரில் பதவிட்டுள்ளதாவது “கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று வரும் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும் மாண்புமிகு தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத்தலைவருமான ஒபிஎஸ் அவர்கள் விரைந்து முழுமையாக நலம்பெற விழைகிறேன்” என்று பதிவிட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பியுள்ளது. இது எடப்பாடியை மறைமுகமாக தாக்குவதுபோல் இருப்பதாக பலரது கருத்து. இந்த ட்விட்டில் ஏதேனும் உள்குத்து இருக்குமோ…???