இந்த ஆண்டுக்கான அக்னி வெயில் நாளையுடன் முடிவுக்குவருகிறது. தமிழகத்தில், கோடையின் உச்சகட்ட வெயிலான அக்னி நட்சத்திரம் கடந்த 4-ம் தேதி துவங்கியது. அப்போது, சென்னை மற்றும் வட மாவட்டங்களில் மிதமான வெப்பநிலை பதிவானது. அதேநேரம், மத்திய மாவட்டங்கள் மற்றும் கடலோர மாவட்டங்களில் வெயில் தீவிரம் காட்டியது.
மே மாதத்தில் வெயில் மிதமாக இருந்தாலும் அதற்கு முன்னதாகவே அதாவது மார்ச்,ஏப்ரல் மாதங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. 1 மாதம் முன்னதாகவே அக்னிவெயில் துவங்கியது போல வெயில் கொழுத்தியது.ஆனால் அதே நேரத்தில் மே மாதம் துவங்கியதும் தமிழம் முழுவதும் அவ்வப்போது பெய்து வரும் கோடை மழையால் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவுகிறது.பகலில் வெயில் அதிகமாக காணப்பட்டாலும் தென்மேற்கு பருவமழை காலம் அந்தமானில் துவங்கியதால், தென் மாவட்டங்களில் வெப்பம் குறைந்து பருவ காற்று வீசியதால், வெப்பத்தின் அளவு சற்று தணிந்தது. அதேநேரம் சென்னை, காஞ்சிபுரம், கடலூர் உள்ளிட்ட வடக்கு கடலோர மாவட்டங்களில் வெயில் உக்கிரம் காட்டத் தொடங்கியது.
சென்னையில்கடந்தசில நாட்களாக 100 டிகிரி பாரன்ஹீட் அளவான, 38 டிகிரி செல்ஷியசை தாண்டி வெப்பநிலை பதிவானது. நேற்று, மாநிலத்தில் அதிகபட்சமாக கரூர் பரமத்தியில் 41 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது.
கடலூரில் 40; சென்னை மீனம்பாக்கம், திருச்சி, வேலூரில் 39; சென்னை நுங்கம்பாக்கம், மதுரை, பரங்கிப்பேட்டை, தஞ்சாவூர், திருத்தணி மற்றும் புதுச்சேரியில் 38 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது.இந்நிலையில், கடந்த 4-ம் தேதி துவங்கிய அக்னி நட்சத்திர வெயில் காலம் நாளையுடன் (28-ம் தேதி) முடிவடைகிறது. இதனால், வெயிலின் அளவு குறையும் என மக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
மேலும் தென்மேற்குபருவமழை முன்கூட்டியே துவங்கும் என் வானிலை மையம் அறிவித்துள்ளது.எனவே ஒருசில நாட்களில் வெயில்தாக்கம் குறையதுவங்கும் என எதிர்பார்க்கலாம்.
நாளையுடன் விடை பெறுகிறது ‘அக்னி’..வெயில்
