• Thu. Aug 13th, 2026
WhatsAppImage2026-08-06at2018242
previous arrow
next arrow
Read Now

விக்கிரமங்கலம் அருகே கிடா முட்டு போட்டி திருவிழா..,

ByKalamegam Viswanathan

Jul 18, 2026

மதுரை மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே உள்ள கல்புளிச்சான்பட்டி கிராமத்தில், மாபெரும் கிடா முட்டு போட்டி திருவிழா மிகவும் கோலாகலமாக நடைபெற்றது

தமிழர்களின் பாரம்பரியத்தையும், வீரத்தையும் பறைசாற்றும் வகையில் இந்த கிடா முட்டு போட்டி ஐந்தாம் ஆண்டாக கல்புளிச்சான்பட்டி கிராமத்தில் ஊர் இளைஞர்கள் மற்றும் பொதுமக்களால் சிறப்பான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இப்போட்டியில் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான கிடாய்கள் களமிறக்கப்பட்டு, ஒன்றோடொன்று ஆக்ரோஷமாக முட்டி மோதின. கிடா முட்டு போட்டியை முன்னாள் எம்எல்ஏ கதிரவன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார் காவல்துறையை சேர்ந்த ஆற்காடு ராஜா முன்னிலை வகித்தார் கிராம மக்கள் வரவேற்றனர் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 80 கோடி கிடாய்கள் இந்த போட்டியில் கலந்து கொண்டன. ஒவ்வொரு ஜோடியும் தங்களது திறமைகளை வெளிக்காட்டி அதிகமான முட்டுக்களை முட்டிய கிடாய்கள் பல்வேறு பரிசுகளை தட்டிச் சென்றன. அதிகமான முட்டுகளுடன் வெற்றியைப் பதிவு செய்த ஒவ்வொரு கிடாய்க்கும் அண்டா மற்றும் சிறப்பு பரிசுகள் மாலை மரியாதைகள் அணிவித்து கௌரவிக்கப்பட்டது.

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகளில் ஒன்றானஇந்த கிடா முட்டுப் போட்டியை நேரில் காண்பதற்காக அருகில் உள்ள சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள், இளைஞர்கள் எனப் பெருந்திரளாக வருகை தந்து போட்டியை உற்சாகத்துடன் கண்டு களித்தனர். கால்நடைத்துறை சார்பில் மருத்துவ பரிசோதனை முகாம் நடந்தது விக்கிரமங்கலம் இன்ஸ்பெக்டர் ராதிகா சப் இன்ஸ்பெக்டர் சுகுமாரன் உள்பட 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்