• Sat. Jul 18th, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

மரக்கன்றுகள் நடும் பணியினை தொடங்கி வைத்த அமைச்சர் முகமது பர்வேஸ்..,

ByS. SRIDHAR

Jul 18, 2026

புதுக்கோட்டை மாநகராட்சி போஸ் நகர் ராஜா குளத்தில் மாநகராட்சி மற்றும் வனத்துறை சார்பில் 15 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணியினை மாண்புமிகு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் திரு.ஜா. முகமது பர்வேஸ் அவர்கள், இன்று தொடங்கி வைத்தார்.

புதுக்கோட்டை மாநகராட்சி மற்றும் மாவட்ட வனத்துறை சேர்ந்து புதுக்கோட்டை மாநகராட்சி பகுதிகளில் உள்ள நீர் நிலைகளில் உள்ள கருவேலம் மரங்கள் அகற்றப்பட்டு அதில் நாட்டு மரங்களான வேம்பு புங்கை நாவல் நீர்மருது போன்ற மரங்களை நட்டு பராமரிக்க உத்தேசிக்கப்பட்டு மாநகர பகுதியில் 15,000 மரக்கன்றுகள் நடவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. அதில் முதல் கட்டமாக இன்று 600 மரக்கன்றுகள் நடவு செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது.. மேலும் மாநகரப் பகுதியில் உள்ள கருவேல மரங்கள் உள்ள நீர் நிலைகள் பூங்காக்கள் மாநகராட்சி அலுவலகங்கள் மற்றும் பொது இடங்களில் மரக்கன்றுகள் பொது நடவு செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி. மு. அருணா, இ. ஆ. ப, அவர்கள், மாநகராட்சி ஆணையர் திரு. காந்திராஜ் அவர்கள், புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் திரு. பிரகாஷ் அவர்கள், நகர் நல அலுவலர் திருமதி. காயத்திரி அவர்கள், வனச்சரவு அலுவலர் திரு. இராஜேந்திரன் அவர்கள், மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் திருமதி. காந்திமதி அவர்கள், சுகாதார ஆய்வாளர் திரு. பாஸ்கர் அவர்கள், மற்றும் மாநகராட்சி, வனத்துறையைச் சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.