• Wed. May 6th, 2026
WhatsAppImage2026-05-05at001329
previous arrow
next arrow
Read Now

மீண்டும் தேர் கவிழ்ந்து விபத்து அதிர்ச்சி…

ByA.Tamilselvan

Jul 31, 2022

புதுக்கோட்டை அருகே மீண்டும் தேர் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளதால் தமிழக முழவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன் தஞ்சாவூர் அருகே தேர்கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதில் பலர் பலியாகினர்.இந்நிலையில் புதுக்கோட்டை அருகே மீண்டும் தேர் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.புதுக்கோட்டை அருகே திருக்கோகர்ணத்தில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு கோகர்ணேஸ்வரர் கோயிலில் தோரோட்டம் நடைபெற்றது. 2 ஆண்டுகளுக்க பிறகு தோரோட்டம் நடந்ததால் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.வடத்தை வேகமாக இழுத்ததால் திடீரென தேர் சாய்ந்து விபத்துக்குள்ளானதில் 7 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.