• Fri. Mar 29th, 2024

கேரளாவை அடுத்து டெல்லியிலும் குரங்கம்மை பரவல்

ByA.Tamilselvan

Jul 24, 2022

இந்தியாவில் குரங்கம்மையின் முதல்பாதிப்பு கேரளாவில் தொடங்கியது. தற்போது டெல்லியிலும் குரங்கம்மை பாதிப்பு துவங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
குரங்கு அம்மை பல்வேறு நாடுகளில் பரவி வருகிறது. இந்தியாவில் இதன் முதல் பாதிப்பு, கேரளாவின் கொல்லம் மாவட்டத்தில் கடந்த 14ஆம் தேதி கண்டறியப்பட்டது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து திரும்பிய அவருக்கு திருவனந்தபுரம் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இரண்டாவதாக, கேரளாவின் கண்ணூர் மாவட்டத்தை சேர்ந்த ஒருவருக்கு குரங்கு அம்மை உறுதி செய்யப் பட்டது. இந்நிலையில் 3ஆவது நபராக, ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து கேரளா வந்த 35 வயது நபருக்கு குரங்கு அம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து 3 பேரும் தீவிர சிகிச்சையில் உள்ளனர்.
டெல்லியில் ஒருவருக்கு குரங்கு அம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. டெல்லியை சேர்ந்த நபருக்கு குரங்கு அம்மை உறுதி செய்யப்பட்டதால் இந்தியாவில் மொத்த பாதிப்பு 4 ஆக அதிகரித்துள்ளது. குரங்கம்மை நோயை சர்வதேச அவசரநிலையாக உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது.75நாடுகளில் வேகமாக பரவி வரும் குரங்கம்மை உலக அளவில் கொரோனா போல சிக்கலை ஏற்படுத்தலாம் என்கிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *