• Sat. Apr 20th, 2024

தமிழகத்தில் கூடுதல் தளர்வுகள்!..

Byமதி

Oct 24, 2021

தமிழக அரசு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை வரும் நவம்பர் 15 ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது. பண்டிகை காலத்தை முன்னிட்டு, பொதுமக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்கும் வகையில், அனைத்து வகைக் கடைகள், உணவகங்கள் மற்றும் அடுமனைகள் இரவு 11 மணிவரை மட்டும் செயல்பட விதிக்கப்பட்டிருந்த நேரக்கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுகிறது.

அனைத்து வகை உள் மற்றும் வெளி விளையாட்டு அரங்குகளில், பயிற்சிகள், விளையாட்டு போட்டிகள் நடத்தவும் அனுமதிக்கப்படுகிறது. சிகிச்சை தேவைகளுக்காக நீச்சல் குளங்களை பயன்படுத்தவும் அனுமதிக்கப்படுகிறது.

வரும் நவம்பர் 1ஆம் தேதி அனைத்து திரையரங்குகளும் 100 சதவீதம் பார்வையாளர்களுடன் இயங்கவும், தேவையான எண்ணிக்கையிலான பணியாளர்கள் / கலைஞர்களுடன் அனைத்து வகையான படப்பிடிப்புகளும் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி நடத்த அனுமதிக்கப்படுகிறது.

பள்ளிகளில் 1 முதல் 8 வரையுள்ள வகுப்புகள் சுழற்சி முறையில் நடத்த அனுமதிக்கப்படும். சாதாரண மற்றும் குளிர் சாதன பொது பேருந்து போக்குவரத்து, 100 சதவீதம் இருக்கைகளில் பயணிகள் அமர்ந்து பயணிக்கவும், அரசு பயிற்சி நிலையங்கள் / மையங்கள் 100 சதவீதம் பயிற்சியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.

திருவிழாக்கள் மற்றும் அரசியல் நிகழ்வுகளுக்கு நடைமுறையிலுள்ள தடை தொடரும் என அறிவத்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *