• Tue. Sep 8th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

இரட்டை இலை சின்னத்தில் வாக்குகள் கேட்டு தீவிர பிரச்சாரம்-வைரமுத்து..,

ByS. SRIDHAR

Apr 16, 2026

திருமயம் நமன சமுத்திரம் தேமுத்துப்பட்டி சிவபுரம் உள்ளிட்ட பகுதிகளில் திருமயம் தொகுதி அதிமுக வேட்பாளர் வைரமுத்து இரட்டை இலை சின்னத்தில் வாக்குகள் கேட்டு தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார். தற்போது அதிமுக வேட்பாளர் வைரமுத்து பேசியதாவது,

மக்களுக்கு எந்த அடிப்படை வசதிகளையும் செய்து கொடுக்காத அமைச்சர் ரகுபதி

ஏராளமான பணத்தை வைத்துக்கொண்டு உங்களிடம் ஓட்டு கேட்டு வருகிறார்.

தொகுதி மக்களின் சுக துக்க நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாத ரகுபதி இந்த பகுதி மக்களுக்கு அடிப்படை வசதிகள் கூட செய்து தரவில்லை.

இந்த முறை எனக்கு இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட வாய்ப்பளியுங்கள் எனக்கூறி தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார் அவருடன் ஒன்றிய செயலாளர் திலகர் உள்ளிட்ட நிர்வாகிகள் பலரும் உள்ளனர்.