• Fri. Sep 25th, 2026
WhatsAppImage2026-09-17at2324521
previous arrow
next arrow
Read Now

விமான நிலையத்தில் நடிகை சிம்ரன்..,

ByR.Arunprasanth

May 8, 2025

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் நடிகை சிம்ரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

டூரிஸ் பேமிலி படம் வெற்றி அடைந்ததற்கு மகிழ்ச்சியாகவும் சந்தோஷமாக உள்ளது. குட் பேடு அகலி படமும் நன்றாக வந்து உள்ளதால் நல்ல பேமிலி உருவாகி உள்ளது. என்னுடைய 30 வருட திரை துறை வாழ்க்கையில் டூரிஸ் பேமிலி சிறந்த படம்.

பெண் கதாநாயகி படங்களில் நல்ல கதையம்சம் கொண்டதாக இருந்தால் பண்ணலாம். அரசியலுக்கு வந்த விஜய்க்கு ஆல் தி பெஸ்ட். வாழ்த்துக்கள்.

இந்தியா- பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் உள்ளது. எல்லாம் சரியாக போய் கொண்டு இருக்கிறது. ஆனால் மனித நேயம் தான் ஜெயிக்க வேண்டும்.

விஜய் அரசியல் தொடர்பான கேள்வியை தவிர்த்து கொள்ளுங்கள். சரியான நேரம் வரும் போது சொல்லுகிறேன்.

80ம் ஆண்டுகளில் இருந்த கதாநாயகிகள் மீண்டும் சினிமாவிற்கு வருவது நல்லது தானே.

பத்ம பூஷன் விருது பெற்ற அஜித் குமாருக்கு வாழ்த்துக்கள். இவ்வாறு அவர் கூறினார்.