கொரோனா பரவலால் விதிக்கப்பட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை ரயில்வே நிர்வாகம் திரும்பப் பெற்றுள்ளது. ஆனாலும், சலுகைகள் வழங்குவது மற்றும் ஏசி ரயில் பெட்டிகளில் பயணிகளுக்கு போர்வை வழங்குவது ஆகியவை மட்டும் நிலுவையில் உள்ளது.
இதுதொடர்பாக ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் மாநிலங்களவையில் நேற்று அளித்த பதிலில், ‘‘ஏசி பெட்டிகளில் படுக்கை விரிப்பு மற்றும் போர்வையை மீண்டும் வழங்கும் பணியை தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால் தற்போது ஒமிக்ரான் எனும் புது வகை கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, மீண்டும் போர்வை வழங்கும் நடவடிக்கை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக நிபுணர்கள் கருத்தை கேட்டறிந்து முடிவு செய்யப்படும். நாடு முழுவதும் தற்போது ரயில் நிலைய பிளாட்பார்ம் டிக்கெட் கட்டணம் குறைக்கப்பட்டு சகஜ நிலைக்கு வந்து விட்டது’’ என்றார்.