ஒமிக்ரான் தொற்று பாதிப்பு பரவுவதை தடுக்கும் நோக்கில் மும்பையில் 2 நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் ஒமிக்ரான் தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் சூழலில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா, ராஜஸ்தான், குஜராத், கர்நாடகா மாநிலங்களில் ஒமிக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் இதுவரை 17 நபர்களுக்கு ஒமிக்ரான் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.