உலகில் உள்ள ஒவ்வொருவரும் கின்னஸ் சாதனைக்காக பல்வேறு செயல்களைச் செய்வது உண்டு. அந்த வகையில், இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ஒருவர் முகத்தில் அதிகப்படியான துளைகளைப் போட்டு கின்னஸ் சாதனை படைத்திருப்பது அனைவரையும் வியக்க வைத்திருக்கிறது.
இங்கிலாந்து நாட்டை சேர்ந்தவர் ஜேம்ஸ் கோஷ் (27). இவர் முகத்தில் அதிகப்படியான துளைகளை போட்டு உலக கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார். இவர் முன்னதாக முகத்தில் 15 துளைகளை போட்டு கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றார். தற்போது அதனை 17 ஆக உயர்த்தி தன்னுடைய சொந்த சாதனையை அவரே முறியடித்துள்ளார்.
உலக கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றது குறித்து ஜேம்ஸ் கோஷ் பேசுகையில், என்னுடைய சாதனை குறித்து யார் என்ன நினைப்பார் என்ற கவலை எனக்கு இல்லை. நான் அதைப் பற்றி யோசிக்கவும் இல்லை. நான் என்ன செய்கிறேன் என்பதே எனக்கு முக்கியம் என்று கூறியுள்ளார். மேலும் வித்தியாசமான சாதனை மூலம் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்ற ஜேம்ஸ் கோஷ்க்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.