• Tue. May 30th, 2023

ஆருத்ரா மோசடி- நடிகர் ஆர்.கே. சுரேஷின் வங்கிக் கணக்குகள் முடக்கம்!!

ByA.Tamilselvan

May 3, 2023

பாஜக ஓபிசி பிரிவு துணைத் தலைவராக உள்ள ஆர்.கே. சுரேஷுக்கு ஆருத்ரா மோசடியில் தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளதை அடுத்து அவரது வங்கி கணக்கு முடக்கப்பட்டுள்ளது.
ஆருத்ரா கோல்ட் நிறுவனம் முதலீட்டாளர்களுக்கு 25 முதல் 30 சதவீதம் வரை வட்டி எனக்கூறி சுமார் ஒரு லட்சம் முதலீட்டாளர்களிடமிருந்து ரூ.2438 கோடி மோசடி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக முதலீட்டாளர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் பொருளாதார குற்றப்பிரிவு தடுப்பு பிரிவு போலீசார் 21 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இந்த சூழலில் சினிமா தயாரிப்பாளர் மற்றும் பாஜக ஓபிசி பிரிவு துணைத் தலைவராக உள்ள ஆர்.கே. சுரேஷுக்கு ஆருத்ரா மோசடியில் தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது . போலீஸ் விசாரணையில் உரிய ஆவணங்களுடன் நேரில் ஆஜராகும்படி ஆர்.கே. சுரேஷுக்கு பொருளாதார குற்றப்பிரிவினர் சம்மன் அனுப்பினர். ஆனால் அவர் ஆஜராகவில்லை. இதையடுத்து நடிகர் ஆர். கே. சுரேஷ் உட்பட நான்கு பேர் மீது லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நடிகரும், பாஜக நிர்வாகியுமான ஆர்.கே. சுரேஷின் வங்கிக் கணக்குகளை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் முடக்கியுள்ளனர். தொடர்ந்து ஆர் கே சுரேஷ் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *