
மதுரை கென்னல் கிளப் உடன் இணைந்து இந்திய நாட்டின நாய்கள் சங்கத்தின் தமிழ்நாடு பிரிவு சார்பாக நாட்டின நாய்கள் கண்காட்சி மதுரை தமுக்கம் மைதானத்தில் 2 நாட்கள் நடைபெறுகிறது.

இக்கண்காட்சியில் கன்னி, சிப்பிப்பாரை, ராஜபாளையம், கோம்பை, முதல் ஹவுன்ட், பசினி ஹவுன்ட் உள்ளிட்ட 8 வகையான இந்திய நாட்டின நாய்கள் பங்கேற்றன. 2 நாட்கள் நடைபெறும் கண்காட்சியில் முதல் நாளான இன்று நாட்டின நாய்களும், நாளை வெளிநாட்டு நாய்களும் பங்கேற்க உள்ளது. நாயின் வயது, நிறம், உயரம், எடை, கட்டளையை பின்பற்றும் திறன் போன்றவைகளின் அடிப்படையில் சிறந்த நாட்டின நாய் தேர்வு செய்யப்பட்டு பரிசுகள் வழங்கப்படும். 8 இனங்களிலும் முதல் மற்றும் இரண்டாம் பரிசுகள் வழங்கப்படும்.

இந்த கண்காட்சியில் சுமார் 700 க்கும் மேற்பட்ட நாட்டின நாய்கள் மற்றும் அதன் உரிமையாளர்கள் கலந்து கொண்டு தங்களின் நாய்களை காட்சிப்படுத்தினர். ஒவ்வொரு சுற்றுக்களாக நடைபெறும் கண்காட்சியில் நாளை மாலை இறுதி சுற்று நடைபெற்று பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளது.
