• Wed. Dec 11th, 2024

மதுரையில் ஓடும் ஆம்புலன்ஸில் பெண்ணுக்குப் பிரசவம்..!

Byவிஷா

Jan 29, 2022

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு ஓடும் ஆம்புலன்ஸிலேயே அழகான ஆண்குழந்தை பிறந்ததையடுத்து, மருத்துவ உதவியாளருக்கும், ஆம்புலன்ஸ் ஓட்டுநருக்கும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.


மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே எம்.கல்லுப்பட்டியைச் சேர்ந்த வளர்மதி என்ற கர்ப்பிணி பெண்ணிற்கு பிரசவ வலி ஏற்பட்டதால் 108 ஆம்புலென்ஸ்-க்கு தொடர்பு கொண்டுள்ளனர். பிரசவ வலியால் துடித்த வளர்மதியை 108 ஆம்புலன்ஸில் ஏற்றிக் கொண்டு உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அப்போது செல்லும் வழியில் ஏழுமலை பிரிவு அருகே வளர்மதிக்கு ஆம்புலன்ஸிலேயே ஆண் குழந்தை பிறந்ததுள்ளது.


இதையடுத்து, தாயும் சேயும் நலமுடன் உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கர்ப்பிணி பெண்ணிற்கு பிரசவம் பார்த்த அவசர மருத்துவ உதவியாளர் லோகமணி மற்றும் ஊர்தி ஓட்டுநர் ராமன் ஆகியோருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.