நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு, மதுரை மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி சார்பில், அதிகபட்ச இடங்களில் போட்டியிட்டு வெற்றி பெறுவதற்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இந்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட செயலாளர் கிட்டு தலைமையிலும் மாவட்ட செயலாளர்கள் செல்வம் அழகர்சாமி வீரக்குமார் மற்றும் வன்னியர் சங்க மாநிலத் துணைத் தலைவர் நடராஜன் முன்னிலையில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராகவும் மாவட்ட தேர்தல் பொறுப்பாளராகவும் கலந்து கொண்ட பாமக மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் கரூர் பாஸ்கரன் தேர்தலில் போட்டியிடுபவர்கள் பட்டியல் மற்றும் தேர்தலில் வெற்றி பெறுவதற்கான ஆலோசனைகளை வழங்கினார்.
கூட்டத்தில் மதுரை மாவட்டத்திலுள்ள மாநகராட்சி 3 நகராட்சி 9 பேரூராட்சிகளில் உள்ள வார்டுகளில் தேர்தலில் வெற்றி வாய்ப்புள்ள இடங்களில் வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.