• Tue. Aug 25th, 2026
WhatsAppImage2026-08-20at214238
previous arrow
next arrow
Read Now

நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம்..,

ByP.Thangapandi

Aug 7, 2026

தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கல்லூரி முன்பு மூட்டா அமைப்பைச் சேர்ந்த கல்லூரி பேராசிரியர்கள் 8-வது ஊதிய குழுவில் அமைக்க வேண்டும், பழைய ஓய்வு திட்டத்தை அமுல்படுத்த வேண்டும், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும், என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கல்லூரி வளாகம் முன்பு மூட்டா அமைப்பைச் சேர்ந்த கல்லூரி பேராசிரியர்கள் இணைந்து 8-வது ஊதிய குழுவில் அமைக்க வேண்டும், பழைய ஓய்வு திட்டத்தை அமுல்படுத்த வேண்டும், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும், எம்.பில் மற்றும் பி.எச்டி க்கு ஊக்கத் தொகை வழங்க வேண்டும்,

மாநில அரசு கல்லூரி ஆசிரியர்களுக்கு அனைத்து கல்லூரி ஆசிரியர்களுக்கு வழங்கியது போல் அரசாணை 5 படி அரசு உதவி பெறும் கல்லூரி ஆசிரியர்களுக்கு இணை பேராசிரியர்களுக்கு பணி மேம்பாட்டு நிதியினை வழங்க வேண்டும்.

உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மூட்டா சங்கத்தின் தலைவர் சுரேஷ் தலைமையில் கண்டன கோஷங்களை எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.