தேனி மாவட்டம் சின்னமனூர் நகரம்,மின்நகர் அருகில் அமைந்துள்ள சங்கிலி தேவன் குளம் பகுதியில் ‘வீ தி லீடர்’ (WE THE LEADERS) – (மாறுவோம் மாற்றுவோம்) சார்பில் “மரம் நடுவோம்! பூமியை காப்போம்!” என்னும் பசுமை விழிப்புணர்வு மரக்கன்று நடும் விழா சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வு கடந்த 23-08-2026 அன்று மாலை 05:30 மணியளவில் இனிதே நடைபெற்றது.
சின்னமனூரை பசுமையாக்கவும், பூமி தாயை பாதுகாக்கவும் வலியுறுத்தி நடத்தப்பட்ட இக்கூட்டு பணியில், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் சசிக்குமார், ஈஸ்வரன், கணேசன், சுந்தரதமிழ்பாண்டி, பாஸ்கரன், ஆத்தியப்பன், கண்ணப்பன் மற்றும் பொதுமக்கள் அனைவரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.




