• Thu. Mar 28th, 2024

வங்க கடலில் உருவாகி உள்ள புதிய புயல் மோக்கா

ByA.Tamilselvan

May 6, 2023

தெற்கு வங்க கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது எனவும், அடுத்தடுத்த நாட்களில் மேலும் வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் எனவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்றதால் புயலாக மாறும் எனவும் அதற்கு மோக்கா என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இதனால் தமிழக வங்க கடல் பகுதியில் மோசமான வானிலை நிலவும் எனவும் மற்றும் கடல் காற்றானது மணிக்கு 50 முதல் 60 கி.மீ வேகத்திலும், சில சமயங்களில் மணிக்கு 70 முதல் 80 கி.மீ வரை வீசக்கூடும் எனவும் வானிலை எச்சரிக்கை பெறப்பட்டுள்ளது.
ஆகவே விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த அனைத்து வகையான மீன்பிடி படகுகளும் 06.05.2023 முதல் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்குள் மீன்பிடிக்க செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள்.மேலும் அனைத்து கிராம மீனவர்களும் தங்களது படகு, இயந்திரம் மற்றும் வலை உள்ளிட்ட மீன்பிடி உபகரணங்களை மேடான பகுதிக்கு எடுத்துச் சென்று பாதுகாப்பாக வைக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இப்பணியினை அனைத்து சாகர்மித்ரா பணியாளர்களும் தங்கள் கிராமத்தில் தகவல் தெரிவித்து மீன்பிடி சாதனங்களை பாதுகாப்புகருதி மேடான பகுதியில் எடுத்துவைக்க அறிவுறுத்துமாறு சாகர்மித்ரா பணியாளர்களை கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *