மதுரையில் சாலையில் பயணித்த தனியார் பேருந்தின் பின் சக்கரத்தில் zomato ஊழியரின் தலை நசுங்கி பரிதாபமாக பலியானார்.
மதுரை திருப்பரங்குன்றத்தில் இருந்து மேலூர் நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து ஓட்டுநர் விக்னேஷ் என்பவர் மதுரை பழங்காநத்தம் சுரங்கப்பாதை அருகே சென்று கொண்டிருந்த போது அதே வழியாக நடராஜன்( வயது 57) என்கிற zomato ஊழியர் இருசக்கர வாகனத்தில் பேருந்து கடக்க முயன்ற போது அந்தப் பகுதியில் இருந்த டிரான்ஸ்பார்மர் இடையூறாக இருந்ததை அடுத்து zomato ஊழியர் நிலைத்திடுமாறி இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்த நிலையில் தனியார் பேருந்தில் பின் சக்கரத்தில் நடராஜனின் தலை சிக்கியதில் அவரின் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனை தொடர்ந்து மதுரை போக்குவரத்து புலனாய்வு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து zomato ஊழியரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். தொடர்ந்து சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.