• Thu. Mar 28th, 2024

ஏழைகளுக்கு ஒரு சட்டம்..! ஆளும் கட்சியினருக்கு ஒரு சட்டமா..!

Byமதி

Oct 28, 2021

அதிகாரிகள் நேர்மையாக நடக்க மக்கள் கோரிக்கை…

சேலம் மாவட்டம் வாழப்பாடியில் சாலையோரம் அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளி முன்புறம், பஸ் நிலையம் மற்றும் முத்தம்பட்டி ரயில்வே கேட் முதல் வாழப்பாடி பேளூர் பிரிவு ரோடு வரை உள்ளது. இங்கு இயங்கிவந்த சாலையோர காய்கறி, பழக்கடைகள் அனைத்தும் அகற்றப்பட்டன.


சாலையோர வியபாரிகள் அனைவரும் தங்களுக்கு கடை வைக்க இடம் ஒதுக்கி வாழ்வளிக்குமாறு, அரசியல்வாதிகள், அதிகாரிகள் மற்றும் மாவட்ட ஆட்சிதலைவர் வரை மனுக்கள் கொடுத்தனர். ஆனால், சாலையோரம் கடைகள் வைப்பதால் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக இருப்பதால், சாலையோரம் கடைகள் வைக்க அனுமதிக்கவில்லை.
மேலும், தனியார் வணிக நிறுவனங்கள், கட்டிடங்களின் முன்பாக போடப்பட்டிருந்த அட்டைகள், தரைத்தளம் ஆகியவற்றை ஆக்கிரமிப்பு எனக்கூறி, இவற்றை அதிகாரிகள், போலீஸ் துணையுடன் அகற்றினார்கள்.

ஆனால் வாழப்பாடியில் அரசு மருத்துவமனை அருகில் ஆளும் கட்சியினர் இரவோடு இரவாக சில நாட்களுக்கு முன், போர்டும் கொடிகம்பம் நட்டு வைத்துள்ளனர். இந்த போர்டு அரசு நிலமான ரோடு பகுதியில் தான் உள்ளது. இவற்றை அகற்ற தயங்குகிறார்கள்.

எனவே வாழப்பாடியில் அனைவருக்கும் சட்டம் சமமாக இருக்க வேண்டும்.
ஏழைகளுக்கு ஒரு சட்டம்! கட்சி சார்ந்தவர்க்கு ஒரு சட்டம் இருக்க கூடாது!
அதிகாரிகள் நேர்மையாக நடக்கவேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *