• Fri. May 1st, 2026
WhatsAppImage2026-04-23at013527
previous arrow
next arrow
Read Now

தேர்வு விடுமுறையை கொண்டாட குடும்பத்துடன் தேனி மாவட்ட எல்லையில் ஒரு ஜாலி டூர்….

சுற்றுலாப்பயணிகள் செல்வதற்கும், அறிந்து கொள்வதற்கும் அனுபவிப்பதற்குமான இயற்கை அழகினைக் கொண்டிருக்கும் ஒரு ரம்மியமான இடம் இடுக்கி மாவட்டம். பார்க்கும் இடம் எல்லாம் பச்சைப் பசேல், வனாந்தரங்கள், மிரட்டும் மலைகள், கண்ணுக்கனிய பள்ளத்தாக்குகள், எண்ணற்ற நீரோடைகள், பெரிய நீர்வீழ்ச்சிகள், பரந்து விரிந்த தேயிலைத் தோட்டங்கள் மற்றும் வளைந்து வளைந்து செல்லும் நடைபாதைகள் சுற்றுலாப் பயணியருக்கு கிடைக்கும் சிறந்த அனுபவத்தின் பகுதிகளாகும். பள்ளி இறுதித்தேர்வு விடுமுறையில் குடும்பத்துடன் ஜாலியாக ஒரு டூர் செல்ல தேனி மாவட்டத்திற்கு அருகில் உள்ள “கடவுளின் சொந்த நாடு” என்னும் இடுக்கி மாவட்டத்தில் உள்ள, பார்க்கவேண்டிய சில குளு…குளு இடங்கள்……

தேக்கடி:
தேனி மாவட்ட தமிழக எல்லை குமுளியிலிருந்து 4 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள சர்வதேச சுற்றுலாத்தலம் தேக்கடி. முல்லைப்பெரியாறு அணையில் தேங்கி நிற்கும் நீர்தேக்கப் பரப்பின் இயற்கை சூழலில் வாழும் விலங்குகளை கண்டு ரசித்தவாறு படகுச்சவாரி செய்வது தேக்கடியின் சிறப்பு. மேலும் தேக்கடி வனப்பகுதியில் யானைச்சவாரி, டைகர்வியூ என சுற்றுலாப்பயணிகளை மகிழ்ச்சி அடையச்செய்யும் பல சிறப்பு அம்சங்களும் உண்டு. கேரள சுற்றுலா வளர்ச்சிக் கழகம் மற்றும் கேரள வனத்துறையினரின் படகுகள் தேக்கடி நீர்தேக்கப்பரப்பில் சுற்றுலாப்பயணிகளுக்காக சவாரி சென்று வருகிறது. இயற்கை எழிலை ரசித்துச்செல்லும் சுற்றுலாப்பயணிகள் குமுளியிலிருந்து தேக்கடி படகுத்துறைக்கு நடந்து செல்கின்றனர். அனைத்து தரப்பு சுற்றுலாப்பயணிகளும் விரும்பி தங்கும் வகையில் தேக்கடி, குமுளியில் பல்வேறு கட்டணங்களில் நட்சத்திர ஓட்டல் முதல் சாதாரண ஓட்டல்கள் வரை உண்டு.
மூணாறு:
தென்னகத்து காஷ்மீர் என அழைக்கப்படும் மூணாறு கடல் மட்டத்திலிருந்து 1600 முதல் 1800 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. முதிரப்புழை, நல்லதண்ணி, குண்டலை ஆகிய 3 ஆறுகள் கூடுமிடமாதலால் மூணாறு ஆனது. மூணாறுக்கு அருகில் உள்ள, நீலகிரி வரையாடுகள் உள்ள இரவிகுளம் தேசியப்பூங்கா, இந்த பூங்காவிற்கு உள்ளே அமைந்துள்ள, தென்னிந்தியாவிலேயே உயரமான 2700 மீட்டர் உயரம் கொண்ட ஆனைமுடி சிகரம், மாட்டுப்பெட்டி கல்கட்டு அணை, ஏரி படகுச்சவாரி, கேரளாவின் முதல் நீர்மின் திட்டமான பள்ளிவாசல், அருகே உள்ள சின்னக்கனால் அதன் நீர்வீழ்ச்சியும் பார்த்து ரசிக்க வேண்டியவைகள். அனைத்து ரக கட்டணங்களிலும் தங்கும் விடுதிகள் உண்டு.

ராமக்கல்மேடு:
தேனி மேற்கு பகுதி தமிழக எல்லையான கம்பம் மெட்டிலிருந்து 13 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது ராமக்கல் மெட்டு. கடல் மட்டத்திலிருந்து சுமார் 5ஆயிரம் அடி உயரத்திலுள்ள இப்பகுதி ஆசியாவில் அதிக காற்றுவீசும் பகுதிகளில் ஒன்றாகும். இங்கு மணிக்கு 35 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசுவதால் கத்தரி வெயிலிலும் வேர்க்காது. இங்கு இடுக்கி அணை உருவாக காரணமாக இருந்த குலும்பன் என்ற ஆதிவாசி குறவன், மனைவி மற்றும் குழந்தையுடன் இருக்கும் 40 அடி உயர பிரமாண்டமான சிலை மற்றும் கழுகு சிலை சுற்றுலாப்பயணிகளை கவரும். மலை உச்சிப்பகுதியிலுள்ள மின்சாரம் தயாரிக்கும் காற்றாலைகளையும், பைனாகுலர் மூலம் தமிழகத்தின் இயற்கை எழிலையும், கண்டு ரசிப்பதும் கண்களுக்கு விருந்தாகும்.

இடுக்கி அணை:
கம்பம்மெட்டிலிருந்து 50 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது இடுக்கி. ஆசியாவின் இரண்டாவது மிகப்பெரிய அணையான இடுக்கி ஆர்ச்டேம் இங்குள்ளது. 839 அடி உயரமுள்ள குறவன் மலையையும், 925 அடி உயரமுள்ள குறத்திமலையையும் இணைத்து 555 உயரத்திற்கு கட்டப்பட்ட அணை இது. புதன்கிழமை தவிர மற்ற நாட்களில் சுற்றுலாப்பயணிகள் அனுமதிக்கப் படுகின்றனர். 555 அடி உயர அணையில் ஸ்பீடு போட்டில் சவாரி செய்வது சுற்றுலாப்பயணிகளுக்கு திரில்லான அனுபவம். இதை அடுத்து செறுதோணி அணை, பார்க், மற்றும் மூலமட்டத்தில் உள்ள மிகப்பெரிய நீர் மின் உற்பத்தி நிலையம் பார்க்க கூடியவை.
வாகமண்:
குமுளியிலிருந்து ஏலப்பாறை வழியாக 45 கிலோ மீட்டரில் உள்ளது வாகமண். கடல் மட்டத்திலிருந்து 5 ஆயிரம் அடி உயரத்தில் உள்ள வாகமண்ணில் தற்கொலை விளிம்பு, மொட்டைக்குன்றுகள், பைன்மரக்காடுகள், வாகமண் அருவி, பாரா கிளைடிங் பயிற்சி இடம், ஏரியில் கால்மிதி படகு சவாரி போன்றவை சுற்றுலாப்பயணிகள் கண்டு, அனுபவித்து ரசிக்க வேண்டியவை. இங்குள்ள பைன் மரக்காடுகளில் ஏராளமான தமிழ் திரைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளது. தற்போது வாகமண் திரைப்பட நகரமாக மாறி வருகிறது. கூட்ட நெரிசல் இல்லாத அற்புத மலைப்பிரதேசம். சுற்றுலாப்பயணிகளும் தங்கும் வகையில் பல்வேறு கட்டணங்களில் லாட்ஜ்கள் உண்டு.

கெவி:
தேக்கடி பெரியாறு புலிகள் சரணாலயப்பகுதிக்குள் அமைந்திருக்கு சுற்றுலாப்பகுதி கெவி. கேரள வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த பகுதிக்கு சுற்றுலாப் பயணிகளை அழைத்துச் சென்று திரும்ப கேரள வனத்துறையின் “ஜங்கிள் சபாரி” என்ற பஸ் இயக்குகின்றனர். வண்டிப்பெரியாறு வள்ளக்கடவு வனத்துறை சோதனைச் சாவடியில் இருந்து 16 கிலோமீட்டர் வரை செல்லும் 3 மணிநேர பயணத்துக்கு நபர் ஒன்றுக்கு 500 ரூபாய் கட்டணமாகவும், 50 ரூபாய் நுழைவுக்கட்டணமாகவும் வசூலிக்கப்படுகிறது. வண்டியில் இருந்தவாறே வனவிலங்குகளை கண்டு ரசிக்கலாம். கெவி சென்று திரும்பும் வரை, இடையில் பயணிகள் வண்டியிலிருந்து இறங்க அனுமதிப்பதில்லை.

பருந்தும் பாறை:
குமுளியிலிருந்து 28 கிலோமீட்டர் தொலைவில், கடல் மட்டத்திலிருந்து ஐந்தாயிரம் அடி உயரத்தில் உள்ளது பருந்தும்பாறை. இங்குள்ள இயற்கை அழகும், தற்கொலை பாறை விளிம்புகளும், தாகூர் பாறையும் ( மகாகவி ரவீந்திரநாத் தாகூரின் தலையைப்போன்ற அமைப்பு உள்ளதால் தாகூர்பாறை என பெயர் பெற்றது). குறிஞ்சி மலர்களும் ரசிக்கக் கூடியவை. சபரிமலை மண்டல காலத்தில் மகரஜோதியை தரிசிக்க ஐயப்ப பக்தர்கள் அதிக அளவில் இங்கே வருகின்றனர்.

செல்லார் கோவில் மெட்டு:
குமுளியை அடுத்து 13 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது செல்லார் கோவில்மேடு. இங்குள்ள அருவிக்குழி மலைப்பகுதியில் நீர்வீழ்ச்சி உள்ளதால் இதை கேரளாவில் அருவிக்குழி நீர்வீழ்ச்சி என அழைக்கின்றனர். இந்த அருவிக்குழி நீர்வீழ்ச்சி தான் தேனி மாவட்டம் கூடலூர் மந்தை வாய்க்கால் பகுதியில் வரும் சுரங்கனாறு நீர்வீழச்சி. மிக உயர்ந்த மலைப்பகுதி. இங்கிருந்து தமிழகத்தின் இயற்கை எழிலைக்காணலாம். தற்போது செல்லார்கோவில் வரும் சுற்றுலாப்பயணிகளுகளுக்காக அருவி உருவாகும் இடத்தில் செக்டேம் கட்டி கால்மிதி படகு (பெடல்போட்) அமைக்க இடுக்கி மாவட்டம் சக்குபள்ளம் கிராமப்பஞ்சாயத்தில் முடிவு செய்துள்ளனர்.

அஞ்சுருளி:
கம்பம் மெட்டில் இருந்து 22 கிலோமீட்டர் தொலைவில் (கட்டப்பனையிலிருந்து ஏலப்பாறை செல்லும் வழியில் 9 கிலோமீட்டர் தொலைவில்) உள்ளது அஞ்சுருளி. இடுக்கி அணையின் ஆரம்பம் இதுவே. இரட்டையார் அணையிலிருந்து அஞ்சுருளிக்கு தண்ணீர் வரும் டணல் (குகை) இங்கு சிறப்பு மிக்கது. இரட்டையார் முதல் அஞ்சுருளி வரை 5.5 கிலோமீட்டர் நீளமும், 20 அடி அகலமும் உள்ள இந்த டணல் 1974&ல் தொடங்கி 1980&ல் முடிக்கப்பட்டது. ஐந்து உருளி (அண்டா) கவிழ்த்தி வைத்ததுபோல் மலைகள் இருந்ததால் ஆதிவாசி குடிகள் இதற்கு அஞ்சுருளி எனப்பெயரிட்டுள்ளனர். ஏராளமான சுற்றுலாப்பயணிகள் வந்து செல்லும் இடம்.

அய்யப்பன்கோவில் மற்றும் தொங்குபாலம்.
கட்டப்பனையிலிருந்து 14 கிலோ மீட்டர் தொலைவில் பெரியாற்றின் குறுக்கே அய்யப்பன்கோவில் பஞ்சாயத்து மற்றும் காஞ்சியாறு ஊராட்சியை இணைக்கும் இரும்பு தொங்கு பாலம். 2012ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. திரைப்படங்களில் முலம் பிரபலமானது. இந்த தொங்கு பாலம். தற்போது தனிப்பாடல்கள் மற்றும் திருமண ஆல்பங்களுக்காக நாள்தோறும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். தொங்கு பாலத்தின் இடதுபுறம் 200 மீட்டர் தூரத்தில் உள்ள பழமையான ஸ்ரீதர்மசாஸ்தா கோயில் மற்றொரு சிறப்பு பகுதியாகும். கனமழையின் போது இடுக்கி அணையில் இருந்து தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும்போது கோயிலும் அதன் சுற்றுப்புறமும் நீரில் மூழ்கும். இந்த சமயங்களில் பக்தர்கள் தெப்பம் மற்றும் படகுகளில் கோவிலுக்குச் சென்று வழிபடுவர்.

அம்மச்சி கொட்டாரம்.
குமுளியிலிருந்து 35 கிலோமீட்டர் தூரத்திரல் குட்டிக்கானம் அருகே உள்ளது அம்மச்சி கொட்டாரம். குட்டிக்கானம் பனி படர்ந்த மலைகளுக்கு பெயர் பெற்றது. இங்கு 200 ஆண்டுகள் பழமையான அம்மாச்சிக்கொட்டாரம் (முன்பெல்லாம் ஆட்சியாளர்களின் மனைவிமார்கள் அம்மச்சி (அம்மா) என்று அழைப்பார்கள்) என்னும் அரண்மனை 25 ஏக்கர் பரப்பளவில் அடர்ந்த வனப்பகுதியில் மரங்களுக்கு நடுவே அமைந்துள்ளது. ராணி சேதுலக்ஷ்மி பாய், திருவிதாங்கூரின் கோடைகால தலைநகராக இந்த அம்மச்சிக்கொட்டாரத்தைப் பயன்படுத்தினார். இந்த அரண்மனையிலிருந்து இரண்டு ரகசிய நடைபாதைகளும், ஒரு சுரங்கப்பாதையும் உள்ளன. 5 கிமீ நீளமுள்ள சுரங்கப்பாதை அரண்மனையிலிருந்து பீருமேடு ஸ்ரீ கிருஷ்ணன் கோவிலுக்கு செல்கிறது என்கிறார்கள். பழமையான அரண்மனையை நேரில் பார்க்கும் போது சுற்றுலாப்பயணிகளுக்கு திகில் நிறைந்த பேய்மாளிகை படங்களை நினைவூட்டும். இவ்வளவு இயற்கை எழில் கொஞ்சும் குளு,குளு இடங்கள் நம் அருகில் இருக்க இந்த பொதுத்தேர்வு விடுமுறையில் குடும்பத்துடன் ஒரு ஜாலி டிரிப் சென்று வரலாமே.

செய்தி தொகுப்பு: விஜி ஜோசப் (தலைமை செய்தியாளர்)

  • பத்மகிரி பாபா ஜீவசமாதியில் சித்திரை பௌர்ணமி விழா..,
    திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள குட்டம் சுக்காம்பட்டி கருமலை அடிவாரத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற ஆதி கோரக்கநாதர் மௌனகுரு சித்தர் ஸ்ரீலஸ்ரீ பத்மகிரி பாபா ஜீவசமாதி உள்ளது. இங்கு சித்திரை பௌர்ணமியை முன்னிட்டு லட்சார்ச்சனையுடன் யாக பூஜை நடைபெற்றது. இதனை அடுத்து ஜீவசமாதியில் சிறப்பு பூஜை நடத்தப்பட்டது வேடசந்தூர் ஆத்துமேட்டில் இருந்து கருமலைக்கு இலவச பேருந்து வசதி செய்யப்பட்டது. விழாவில் திண்டுக்கல், சென்னை, திருச்சி, கோவை, சேலம், மதுரை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து… Read more: பத்மகிரி பாபா ஜீவசமாதியில் சித்திரை பௌர்ணமி விழா..,
  • சொன்னபடியே செய்து காட்டிய சி.விஜயபாஸ்கர்…
    விராலிமலை கோடாலிகுடி அருகில் கழக இல்ல விழாவிற்கு சென்ற இடத்தில், சிறுவர்கள் பம்பரம் விளையாடி கொண்டிருந்ததை கண்டு தானும் பம்பரம் சுற்ற வருவதாக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியதை கண்டு உற்சாகமடைந்த சிறுவர்கள் உங்களால் பம்பரம் சுற்ற முடியாது என்று சவால் விட்டனர். இதையடுத்து சிறுவர்களின் பம்பரத்தை வாங்கி வீட்டின் முன்புறம் சுற்றி கையில் எடுத்து சுழற்றி காட்டியவுடன் சுற்றி இருந்த அனைவரும் உற்சாகமாக கை தட்டி மகிழ்ந்தனர். தேர்தல் பிரச்சாரம் முடிந்தவுடன் அவரவர் ஓய்வு எடுக்க… Read more: சொன்னபடியே செய்து காட்டிய சி.விஜயபாஸ்கர்…
  • சுப்பிரமணியன்சுவாமி கோவிலில் சிலையை ஊர்வலமாக எடுத்துச் சென்று வழிபட்ட மக்கள்..,
    மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான மாதாந்தம் சுப்ரமணியசுவாமி கோவில் அமைந்துள்ளது., இந்நிலையில் இக்கோவில் பூசாரியாக உள்ள கணேசன் பல்வேறு முறைகேடுகள் செய்ததாகவும் திருமண நிகழ்வுகள் நடைபெறும் பொழுது ஜாதி அடிப்படையில் பாராபட்சம் பார்ப்பதாகவும் ஆத்தங்கரைப்பட்டி கிராம மக்கள் குற்றம் சாட்டி அவரை மாற்றக்கோரியும், மாதாந்திர சுப்ரமணியர் கோவில் பெயர் பலகையில் எழுமலை என்ற ஊருக்கு பதிலாக ஆத்தங்கரைபட்டி என்ற பெயரை மாற்றக் கோரியும்… Read more: சுப்பிரமணியன்சுவாமி கோவிலில் சிலையை ஊர்வலமாக எடுத்துச் சென்று வழிபட்ட மக்கள்..,
  • தூய்மை பணியாளர் வீரம்மாளுக்கு கௌரவ படுத்திய தருணம்..,
    புதுக்கோட்டை மாவட்டம் மேட்டுப்பட்டி அருகே உள்ள ஸ்ரீ பகவான் தேனீர் கடையில் வேலை செய்யும் தொழிலாளர்களை மதிக்கும் வகையில் புதுக்கோட்டையை சேர்ந்த தூய்மை பணியாளர்களுக்கு புத்தாடைகள் இனிப்பு வழங்கி பரிசு பொருள் வழங்கி கௌரவித்தார். அந்த பகுதியில் வேலை செய்யும் வீரம்மாள் என்ற பணியாளரை அழைத்து அவருக்கு மாலை அணிவித்து கௌரவித்தார்.
  • காலணிகள் தைக்கும் தொழிலாளர்களுக்கு மரியாதை செய்த வாழ்வுரிமைக் கட்சியினர்..,
    புதுக்கோட்டை மாநகராட்சி பகுதியில் உள்ள பழைய பேருந்து நிலையம் அருகே மே தின விழாவை முன்னிட்டு தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பாக கால் அணிகள் தைக்கும் தொழிலாளர்களை கௌரவிக்கு விதமாக அவர்களுக்கு மரியாதை செலுத்தி மாலையில் அணிவித்து உணவுக்கு தேவையான அரிசிகள்வழங்கி சிறப்பித்தனர். இதில் 50 க்கு மேற்பட்ட தொழிலாளர்களை கண்டுபிடித்து அவர்களுக்கு மாலை அணிவிக்கும் மரியாதை செலுத்தப்பட்டது. ஒவ்வொரு வருடமும் இவர்கள் வேறு தொழில் செய்யும் தொழிலாளர்களை கௌரிக்கும் விதமாக சில சிறப்புகள் செய்கின்றார்கள். நினைவில்… Read more: காலணிகள் தைக்கும் தொழிலாளர்களுக்கு மரியாதை செய்த வாழ்வுரிமைக் கட்சியினர்..,
  • தமிழ்நாடு டாஸ்மார்க் விற்பனையாளர்கள் நல சங்கத்தின் சார்பாக கலந்தாய்வு கூட்டம்..,
    புதுக்கோட்டையில் தமிழ்நாடு டாஸ்மார்க் விற்பனையாளர்கள் நல சங்கத்தின் மாநில அமைப்பாளர் S.சௌமியமூர்த்தி மற்றும் மாவட்டத் தலைவர் K. குமார் தலைமையில் மே ஓன்று உழைப்பாளர்கள் தினத்தை முன்னிட்டு கொடியேற்றி இனிப்புகள் வழங்கினர். அப்போது தொழிலாளர்களின் ஒற்றுமையை மேம்படுத்தும் விதமாகவும் தொழிலாளர்களின் முன்னேற்றத்திற்கான நல்ல பல கருத்துக்களை எடுத்துரைத்து கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்டம் முழுவதும் உள்ள நூற்றுக்கு மேற்பட்ட டாஸ்மார்க் விற்பனையாளர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
  • மே தினத்தை முன்னிட்டு தொழிலாளர் தின விழா..,
    திண்டுக்கல் மாவட்டம் ஏரியோடு மார்ச் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் மே தினத்தை முன்னிட்டு தொழிலாளர் தின விழா நடைபெற்றது. விழாவிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேடசந்தூர் ஒன்றிய செயலாளர் ஜி.கிருஷ்ணமூர்த்தி தலைமையில் கொடி ஏற்றப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கட்சியின் மூத்த தோழர் எம்.ஆர்.முத்துசாமி, ஒன்றிய குழு உறுப்பினர்கள் எம்.பெரியசாமி, ஏ.சவடமுத்து, பி.செல்வம், ஏ.ராகேஷ், ஏ.முத்துக்குமார், எஸ்.மாரிமுத்து, என்.காமலட்சுமி, கிளைச் செயலாளர்கள் எஸ். முருகேசன், ஆர்.அசோக்குமார், ரகு, என்.பாண்டிதுரை, என்.நாகமுத்து, ரங்கசாமி மற்றும் சிஐடியூ மாவட்ட நிர்வாகிகள் தனசாமி, பெருமாள்… Read more: மே தினத்தை முன்னிட்டு தொழிலாளர் தின விழா..,
  • ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவிலில் முளைப்பாரி எடுப்பு திருவிழா..,
    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள கல்லாலங்குடி ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவிலில் இந்த ஆண்டு நல்ல மழை பெய்து வேளாண்மை செழிக்க வேண்டி கரகம் மற்றும் முளைப்பாரி எடுப்பு திருவிழா, ஒன்பது தினங்களாக திருநங்கைகள் விரதமிருந்து முளைப்பாரி போட்டு கரகத்தை அலங்காரம் செய்து வைத்த நிலையில் ஆயிரக்கணக்கான பெண்கள் கரக மற்றும் முளைப்பாரியை எடுத்து மேல தாளங்கள் முழங்க ஊர்வலமாக ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயிலுக்கு சென்று நேர்த்திக்கடன் செலுத்தினர் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள கல்லாலங்குடியில்… Read more: ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவிலில் முளைப்பாரி எடுப்பு திருவிழா..,
  • விமான நிலைய தொழிற்சங்கம் சார்பில் மே தின விழா..,
    மதுரை விமான நிலையத்தில் விமான நிலைய தொழிற்சங்க பேரவை சார்பில் மே தின விழா கொண்டாடப்பட்டது விழாவில் மதுரை விமான நிலைய இயக்குனர் முத்துக்குமார் கலந்துகொண்டு மே தின கொடியேற்றி ஊழியர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். மதுரை விமான நிலைய தொழிற்சங்க தலைவர் ஜெயமுருகன் வரவேற்புரை கூறினார். மதுரை விமான நிலைய தொழிற்சங்க செயலாளர் சுரேஷ் மருது முன்னிலை வகித்தார். மே தின விழாவில் மதுரை விமான நிலைய அகில இந்திய விமான நிலைய தொழிற்சங்கம் சார்பில் மே… Read more: விமான நிலைய தொழிற்சங்கம் சார்பில் மே தின விழா..,
  • 5 மணி நேரம் மின்தடை ஏற்படுவதால் திடீர் சாலை மறியல்..,
    மதுரை பெருங்குடி அம்பேத்கர் நகர் பகுதியில் தொடர்ந்து ஒரு வாரமாக மின்சாரம் தடை ஏற்பட்டதால் பொதுமக்கள் திடீர் சாலை மறியல் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் விமான நிலைய சாலை மதுரை மண்டேலா நகர் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு ஒரு மணி நேரமாக வாகன ஓட்டிகள் அவதி அம்பேத்கர் பொதுமக்கள் தங்கள் பகுதிக்கு உடனடியாக மின்தடை சரி செய்ய கோரி சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.