சோழவந்தான் அரசு போக்குவரத்து பணிமனை தொழிலாளர் முன்னேற்ற சங்க தேர்தலில் அமிர்தராஜ் தலைமையிலான அணியினர் அபார வெற்றி பெற்றனர். செயலாளராக பாலசுப்பிரமணியன், பொருளாளராக பாலமுருகன், துணைச் செயலாளராக தங்கராஜ் ஆகியோரும் வெற்றி பெற்றதாக அறிவிப்பு வெளியிட்டனர்.
மதுரை மாவட்டம் சோழவந்தான் அரசு போக்குவரத்து பணிமனையின் தொழிலாளர் முன்னேற்ற சங்க தேர்தல் இன்று நடைபெற்றது. இன்று காலை எட்டு மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை நடைபெற்றது. மொத்தம் 115 வாக்காளர் வாக்களித்த நிலையில் தொழிலாளர் முன்னேற்ற சங்க தலைவராக அமிர்தராஜ், செயலாளராக பாலசுப்பிரமணியன், பொருளாளராக பாலமுருகன், துணைச் செயலாளராக தங்கராஜன் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மொத்தம் 115 வாக்குகள் பதிவானதில் தலைவர் அமிர்த ராஜுக்கு 86 வாக்குகளும், செயலாளர் பாலசுப்பிரமணியனுக்கு 84 வாக்குகளும், பொருளாளர் பாலமுருகனுக்கு 80 வாக்குகளும், துணைச்செயலாளர் தங்கராஜ்க்கு 82 வாக்குகளும் பதிவானதாக தேர்தல் அதிகாரி அறிவிப்பு வெளியிட்டார்.
இதன் மூலம் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு தொழிலாளர் முன்னேற்ற சங்க சோழவந்தான் அரசு போக்குவரத்து பணிமனை நிர்வாகிகளாக இவர்கள் செயல்படுவார்கள் என அறிவிக்கப்பட்டது வெற்றி பெற்ற அனைவருக்கும் அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர் முன்னேற்ற கழக சங்க நிர்வாகிகள் உறுப்பினர்கள் அனைவரும் பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர் தொடர்ந்து அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு பட்டாசுகள் வெடித்து இனிப்புகள் வழங்கப்பட்டது.