பெரம்பலூர் அருகே குரும்பலூரில் ஏற்பட்ட தீ விபத்தில் வீடு ஒன்று தீக்கிரையானதில் வீட்டினுள் இருந்த பொருட்களும் எரிந்து நாசமானது.

குரும்பலூர் தோப்பு தெருவை சேர்ந்தவர் சஹாப்தீன் மனைவி ஆசிபோ பேகம். சஹாப்தீன் வெளிநாட்டில் வேலை பார்த்து வரும் நிலையில் ஆசிபா பேகம் குழந்தைகளுடன் அருகில் உள்ள ஈச்சம்பட்டி கிராமத்தில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். இந்நிலையில், இன்று மாலை சுமார் 3 மணியளவில் வீடு தீப்பிடித்து எரியத் தொடங்கியது. அக்கம்பக்கத்தினர் பெரம்பலூர் தீயணைப்பு மற்றும் மீட்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டுவந்தனர்.
தீ விபத்தில் வீட்டில் இருந்த டிவி, மிக்ஸி, கிரைண்டர், ஃபிரிட்ஜ் உட்பட தட்டுமுட்டு சாமான்கள், துணிமணிகள் உள்ளிடட பொருட்கள் தீக்கிரையானது. இது குறித்த புகாரின் பேரில், வழக்குப் பதிவு செய்த பெரம்பலூர் ஊரக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் இன்று மாலை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.