கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் மேம்பாலத்தில் ஓடிக்கொண்டிருந்த துணிகடைக்கு துணி ஏற்றிகொண்டு வந்த மினி டெம்போவில் திடீரென மளமளவென பற்றியெரிந்தது தீ. உயிர் தப்பிய ஓட்டுனர் மார்த்தாண்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோடு விராலிவிளை பகுதியை சேர்ந்தவர் ஜினேஷ் இவருக்கு சொந்தமான மினி டெம்போவை கொல்லங்கோடு மேடவிளாகத்தை சேர்ந்த அனி என்பவரது மகன் 23 வயதான அனீஷ் என்பவர் ஓட்டி வந்தார். கொல்லங்கோட்டிலிருத்து மார்த்தாண்டம் பகுதியில் உள்ள துணிகடைக்கு துணி ஏற்றிகொண்டு மார்த்தாண்டம் மேம்பாலத்தில் வந்து கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக வண்டியின் முன் பகுதியிலிருத்து புகை வந்ததை பார்த்த ஓட்டுனரான அனீஷ் வாகனத்தை நிறுத்தி விட்டு வெளியே வந்துள்ளார். அப்போது வாகனத்தில் தீ மளமளவென பற்றி எரிய துவங்கியது.
இதையடுத்து அப்பகுதியில் சென்ற வாகன ஓட்டிகள் கொடுத்த தகவலின் அடிப்படையில் குழித்துறை தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து மினி டெம்போவில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். எனினும் வாகனம் முற்றிலும் எரிந்து சேதமானது. இது குறித்து வழக்குபதிவு செய்த மார்த்தாண்டம் போக்குவரத்து காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில் வாகனத்தில் ஏற்பட்ட மின்கசிவால் தீவிபத்து ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.