தேனி மாவட்டம் கம்பத்தில் நாளை(டிச.19) காலை 8.30 மணி முதல் மதியம் 3 மணி வரை ஸ்ரீ ஆதி சுஞ்சனகிரி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் “மாபெரும் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்” மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் சார்பில் நடைபெறுகிறது.
இம்மாவட்டத்தில் படித்த வேலை வாய்ப்பு அற்ற இளைஞர்கள் பங்கேற்று பயனடையலாம். 100 க்கும் மேற்பட்ட தனியார் முன்னணி நிறுவனங்கள் இம்முகாமில் கலந்து கொள்கின்றன. 2000க்கும் மேற்பட்ட பணியாளர்களை தேர்வு செய்யவுள்ளனர்.மேலும் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவி தொகை விண்ணப்பம் வழங்குதல், மாற்றுத்திறனாளிகளுக்கான வேலை வாய்ப்பு சிறப்பு அரங்கும் இடம் பெற்றுள்ளன.
வேலை தேடும் இளைஞர்கள் முகாமிற்கு வரும்போது கையோடு கல்விச் சான்றுகளின் நகல்கள், ஆதார் அடையாள அட்டை, பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள் மற்றும் பயோ டேட்டா (சுயவிபர குறிப்புகள்) ஆகியவற்றை தவறாமல் எடுத்துச் செல்ல வேண்டும்.
கல்வித்தகுதி:எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ் 2, ஐ.டி.ஐ., டெய்லரிங், ஓட்டுனர் டிப்ளமோ, டிகிரி மற்றும் பி.இ., படித்த 18 முதல் 40 வயதுடையோர் பங்கேற்று பயடையலாம். அனுமதி இலவசம்.