• Sat. Jan 17th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

சத்தியமங்கலம் அருகே யானை மிதித்து விவசாயி படுகாயம்

சத்தியமங்கலம் அருகே யானை துதிக்கையால் பிடித்து தூக்கி வீசி காலால் மிதித்ததால் விவசாயி படுகாயம் அடைந்துள்ளார்.
சத்தியமங்கலத்தை அடுத்த ராம பையனூரை சேர்ந்தவர் அம்மாசை குட்டி (வயது 62). இவருடைய மனைவி தேவிமணி (55). இவர்கள் ராமபையலூர் பகுதியிலேயே தோட்டம் அமைத்து அங்கேயே குடியிருந்து விவசாயம் செய்து வருகிறார்கள்.இவர்களுடைய 2 ஏக்கர் நிலத்தில் வாழை மற்றும் மஞ்சள் ஆகியவற்றை பயிரிட்டுள்ளனர். அதற்கு காவலாக வீட்டின் முன் பகுதியிலேயே அம்மாசைகுட்டி தூங்குவது வழக்கம்.அதன்படி நேற்று முன்தினம் வழக்கம்போல் வீட்டின் முன்தினம் அம்மாசைகுட்டி படுத்து தூங்கி கொண்டிருந்தார். நள்ளிரவு 12 மணி அளவில் நாய் குரைத்து உள்ளது. சத்தம் கேட்டதும் தூங்கி கொண்டிருந்த அம்மாசைகுட்டி விழித்து எழுந்து டார்ச் லைட்டை எடுத்து அடித்து பார்த்தார்.அப்போது தோட்டத்துக்குள் யானை நின்று கொண்டிருந்ததை கண்டு திடுக் கிட்டார். மேலும் அந்த யானையானது அவரை நோக்கி ஓடி வந்தது. இதனால் அவர் அங்கிருந்து ஓட முயன்றார். இதில் அவர் கால் இடறி கீழே விழுந்தார்.


இதனிடையே அருகே வந்த யானையானது, அம்மாசைகுட்டியை துதிக்கையால் பிடித்து தூக்கி வீசி காலால் மிதித்தது. இதில் அவர் படுகாயம் அடைந்தார். பின்னர் சிறிது நேரத்தில் யானை அங்கிருந்து வனப்பகுதிக்குள் சென்றது.
உடனே அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத் தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.