தற்போது இந்தியா உள்ளிட்ட உலகம்முழுவதும் குரங்கு அம்மை நோய் பரவிவருகிறது. இந்த நோய் மனிதர்களிடமிருந்து நாய்க்கு பரவும் என கண்டுபிடித்துள்ளனர்.
பிரான்சில் குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்ட இரண்டு நபர்கள் தங்களை தனிமைப்படுத்தி கொண்ட நிலையில் வளர்ப்பு நாயுடன் ஒன்றாக படுக்கையில் தூங்கியுள்ளனர். இதனால் அந்த நாய் -குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மனிதர்களிடமிருந்து குரங்கு அம்மை வைரஸ் விலங்குகளுக்கு பரவுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே பாதிக்கப்பட்ட நபர்கள் விலங்கிடமிருந்து விலகி இருக்க வேண்டுமென எச்சரிக்கை விடுத்துள்ளனர்.