அமெரிக்க ராணுவதளமான பென்டகனிற்குள் நுழைய இந்திய குழுவுக்கு அனுமதியளித்துள்ளது அமெரிக்க அரசு.
பென்டகன் என்பது உயர் பாதுகாப்பு அடங்கிய அமெரிக்க ராணுவ தளமாகும். இங்கு யாரும் எளிதில் நுழைந்து விட முடியாது. அமெரிக்க பொதுமக்கள் கூட இந்த பகுதிக்குள் நுழையவோ ,நடமாடவோ அனுமதி கிடையாது.இந்நிலையில் இந்திய பாதுகாப்பு அதிகாரி குழுவுக்கு பென்டகனுக்குள் கட்டுப்பாடுகள் இன்றி நுழைய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த குழுவுக்கு அனுமதி வழங்கியதன் மூலம் இரு நாடுகளுக்கிடையேயான உறவின் வலிமையை காட்டுவதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இரு நாடுகளும் இணைந்து தொழில்நுட்ப பரிமாற்றம் உள்ளிட்ட ராணுவ திட்டங்களை செயல்படுத்தவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.