முன்னாள் நாடாளுமன்ற மற்றும் ஐந்து முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்து மறைந்த பி.கே.மூக்கையாத்தேவரின் 47 வது நினைவு தினத்தை முன்னிட்டு உசிலம்பட்டி அருகே பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கல்லூரி வளாகத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் அமமுக சார்பில் அதன் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், தென்னிந்திய பார்வட் ப்ளாக் தலைவர் திருமாறன் தலைமையிலான நிர்வாகிகள் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.,
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன்.,

ஐயா மூக்கையாத்தேவரின் நினைவு தினத்தில் தமிழ்நாட்டு மக்களுக்கு அவர் செய்த சேவைகளை போற்றி வணங்கி, அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளோம்.,
தவெக ஆட்சி குறித்து சொல்ல வேண்டும் என்றால், நாங்கள் சொன்னால் கால்புணர்ச்சியால் சொல்வதாக கூறுகிறார்கள்., ஆட்சியை பற்றி சொல்ல ஒன்றும் இல்லை.,
சினிமா துறையிலிருந்து வந்துள்ளார்கள் என நம்பி வாக்களித்தார்கள்., ஆனால் ஆரம்பத்திலேயே அதிமுக எம்எல்ஏ 25 பேரை நடுரோட்டில் நிறுத்தினார்கள்., அமமுக எம்எல்ஏ வையும் அப்படி தான்.,
வாக்குறுதிகளை தந்திரமாக நிறைவேற்றுவது மாதிரியும் இருக்க வேண்டும், நிறைவேற்றாத மாதிரியும் இருக்க வேண்டும் என செயல்படுத்துகிறார்கள்.,

காவேரி நீரை திறக்க சென்றவர் எம்ஜிஆர் போன்று செய்துள்ளார்., அப்படி செய்தால் எம்ஜிஆர் ஆகிவிட முடியாது.,
உசிலம்பட்டி மக்கள் சட்டை போட கூட வழி இல்லை என்பது அறிவின்மை தான், காமராஜ் பல்கலைக்கழகத்தை கல்லூரியாக மாற்ற சொல்கிறார்கள்.,
அண்ணா காலத்தில் இளைஞர்கள் தான் மாற்றத்தை கொண்டு வந்தார்கள்., இங்கு யாருக்காவது அடிப்படை புரிதல் இருக்கிறதா என கூட தெரியவில்லை, 6 ஆம் அறிவு கூட இல்லை என்பதை தான் காட்டுகிறது., முதல்வருக்கு கூட எழுதி வைத்ததை கூட சரியாக பேச தெரியவில்லை.,
நிர்மல்குமார் உள்ளிட்ட அமைச்சர்கள் பேசுவது, திமுக, அதிமுக உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள் பேசுவதை உதாசீன படுத்துவது போன்று இருக்கிறது.,
இவர்களை எப்படி படித்தவர்கள், பெண்கள் மாற்றம் வேண்டும் என யாரை கொண்டு வந்திருக்கிறீர்கள் என தெரியவில்லை.,
ப்ளாக் டிக்கெட் விற்று வந்தவர்கள் தானே அதனால் தான் சட்டமன்றத்தில் காட்டு கத்து கத்தி வருகிறார்கள்.,
ஆட்சி அமைத்ததும் தில்லு முல்லு செய்து, பணம் தருகிறேன் என சொன்னதால் தான் மாற்றுக் கட்சியினர் உங்களுக்கு ஆதரவு தெரிவித்தார்கள், ஆனால் 25 பேரை நடுரோட்டில் நிறுத்தி விட்டார்கள்.,
இவர் அவர்களாகவே வீழ்ந்துவிடுவார்கள்., இந்த ஆட்சியை சொல்ல வேண்டுமென்றால் கிட்லர் ஆட்சி தான் நடக்கிறது.,

விஜய் அமைதியாக தெரிகிறாரே தவிர மிகவும் நரித்தனமாக, தந்திரமாக, விஷம தனமான செயல்பாடுகளில் ஈடுபட்டு வருகிறார்.,
நாளை சட்டமன்றத்தில் அவரது பேச்சு சினிமா வசனம் போல தான் இருக்கும்.,
நான் அதிமுக இணை பொதுச்செயலாளர் என்பது வதந்தி தான், அந்த பேச்சே இப்போதைக்கு இல்லை.,
தற்போதைய அரசு மேகமலை மக்களின் வாழ்வாதரத்தை பாதுகாக்க வேண்டும்., முந்தைய அரசு எதுவும் செய்யவில்லை என்பது தவறு, தற்போது மறுபரிசீலனை செய்து உரியவற்றை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுங்கள், மக்களை பாதுகாப்பதற்காக தான் உங்களை மந்திரி ஆக்கியுள்ளனர்., என பேட்டியளித்தார்.,








