• Mon. Aug 31st, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

டி20 உலகக் கோப்பை இங்கிலாந்து வெற்றி- ஆஸ்திரேலியா அரையிறுதிக்கு தகுதி பெறுவதில் சிக்கல்

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் பிரிஸ்பேன் மைதானத்தில் இன்று நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் இங்கிலாந்து நியூசிலாந்து அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க வீரர்களாக களம் இறங்கிய ஜோஸ் பட்லர், அலெக்ஸ் ஹாலெஸ் அதிரடியாக விளையாடினார். இ-ங்கிலாந்துக்கு தொடக்கத்தில் இருந்தே ரன்கள் வேகமாக வந்தது. அரை சதம் அடித்த அலெக்ஸ் ஹாலெஸ் 52 ரன்கள் எடுத்தபோது சிக்ஸருக்கு ஆசைப்பட்டு தனது விக்கெட்டை பறிகொடுத்தார். அதன்பின் ஜோஸ்பட்லர் மொயீன்அலியுடன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சிறிதுநேரம் மட்டும் தாக்குப்பிடித்தது. மொ£யீன் அலி 5 ரன் எடுத்து அவுட்டானார். தொடர்ந்து அதிரடி காட்டிய ஜோஸ் பட்லர் 47 பந்துகளில் 73 ரன்கள் குவித்தார். பின்வரிசையில் வந்தவர்களில் லியாம் லிவிங்ஸ்டன் 20 ரன்னும், ஹார்ரி புரூக் 7 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர். 20 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி 6 விக்கெட் இழப்பிற்கு 179 ரன்கள் எடுத்தது. 180 ரன்கள் இலக்கை நோக்கி பின்னர் விளையாடிய நியூசிலாந்து அணியின் பின் ஆலன் 16 ரன்னும், கான்வே 3 ரன்னுக்கும் ஆட்டமிழந்தனர். கேப்டன் வில்லியம்சன் நிதானமாக ஆடி 40 ரன்கள் சேர்த்தார். சிறப்பாக விளையாடிய பிலிப்ஸ் 36 பந்துகளில் 62 ரன்கள் குவித்தார். பின்னர் வந்த வீரர்கள் சொற்ப ரன்களுக்கு அவுட்டாகினர். இதனால் நியூசிலாந்து அணியின் தோல்வி உறுதியானது. இறுதியில் நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் மட்டும் எடுத்தது. இதையடுத்து 20 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. இதனால் இங்கிலாந்து அணி 5 புள்ளிகள் பெற்று 2வது இடத்திற்கு முன்னேறியது. ஆஸ்திரேலியா 5 புள்ளிகள் 3வது இடத்தில் உள்ளது. ஆஸ்திரேலியா தனது கடைசி போட்டியில் அதிக ரன்ரேட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றால் மட்டுமே அரையிறுதிக்கு தகுதி பெற முடியும்.