கூடுவாஞ்சேரி அடுத்த பெருமாட்நல்லூரில் கிராம புறங்களில் விளையாட்டுகளை கொண்டு சேர்க்கும் வகையில் சென்னை விநாயகா மிஷன் கல்லூரி மற்றும் மெய் அறக்கட்டளை இணைந்து நடத்தும் மாநில அளவிலான வாலிபால் போட்டி கோலாகலமாக தொடங்கியது.

மூன்று நாட்கள் நடைபெறும் இந்தப் போட்டியில் தமிழகம் முழுவதும் உள்ள 8 கல்லூரிகளைச் சேர்ந்த வாலிபால் அணிகள் பங்கேற்றுள்ளன.

போட்டியின் தொடக்க ஆட்டத்தில் சென்னை விநாயகா மிஷன் கல்லூரி அணியும், எழும்பூர் எத்திராஜ் பெண்கள் கல்லூரி அணியும் மோதின.
போட்டியினை பெருமாநல்லூர் ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் கே.எஸ். ரவி, இளைஞரணி துணை அமைப்பாளர் வி.கே.பிரபு, முன்னாள் துணை தலைவர் பிரதாப், வார்டு உறுப்பினர்கள் செல்லப்பன், வெங்கடேசன், கிளை கழக செயாளர் சுரேஷ் ஆகியோர் வீரர்களுக்கு கை குழுக்கி போட்டியினை தொடங்கி வைத்தனர்.

லீக் முறையில் நடைபெறும் இப்போட்டியின் இறுதி ஆட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது.
போட்டியில் வெற்றி பெறும் அணிகளுக்கு முதல் பரிசாக ரூ.30,000, இரண்டாம் பரிசாக ரூ.25,000, மூன்றாம் பரிசாக ரூ.20,000, நான்காம் பரிசாக ரூ.15,000 வழங்கப்பட உள்ளது.

மேலும் வெற்றி பெறும் அணிகளுக்கு கோப்பைகள், பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளன.

போட்டிக்கான ஏற்பாடுகளை மெய் அறக்கட்டளை நிறுவனரும், உளவியலாளர் மற்றும் உளச்சிகிச்சை நிபுணருமான டாக்டர் அர்சனா, சென்னை விநாயக மிஷன் கல்லூரி விளையாட்டு துறை இயக்குனர் ஒம்.பிரகாஷ் ஆகியோர் செய்திருந்தனர்.